பாகிஸ்தான் ஜனாதிபதியின் பாராளுமன்ற உரையின் போது ஊடகவியலாளர்கள் வெளிநடப்பு : கலரியை மூடிவிடுமாறு சபாநாயகர் உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Saturday, September 18, 2021

பாகிஸ்தான் ஜனாதிபதியின் பாராளுமன்ற உரையின் போது ஊடகவியலாளர்கள் வெளிநடப்பு : கலரியை மூடிவிடுமாறு சபாநாயகர் உத்தரவு

முன்மொழியப்பட்ட சர்ச்சைக்குரிய ஊடக சட்டத்துக்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில் ஊடகவியலாளர் கலரியை மூடிவிடுமாறு பாகிஸ்தான் தேசிய சட்டசபை சபாநாயகர் அசாத் கைசர் உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஆரிப் ஆல்வியின் பாராளுமன்ற உரையின் போது ஊடகவியலாளர்கள் கலரியில் இருந்து வெளிநடப்பு செய்யுமாறு பாராளுமன்ற நிருபர்கள் சங்கம் (PRA) அழைப்பு விடுத்திருந்தது.

ஜனாதிபதியின் உரையின் போது ஊடக கலரியில் இருந்து வெளிநடப்பு செய்வதாக பாராளுமன்ற நிருபர்கள் சங்கம் அறிவித்ததை தொடர்ந்தே சபாநாயகரின் இந்த அறிவிப்பு வெளியானதாக ஏஎன்ஐ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சக ஊடகவியலாளர்களுடன் இணையுமாறு பாகிஸ்தான் பெடரல் ஊடக அமைப்பு (PFUJ) முன்னதாக அழைப்பு விடுத்திருந்தது.

இதேவேளை சர்ச்சைக்குரிய ஊடக அபிவிருத்தி அதிகார சபை சட்டத்திற்கு எதிராக பாகிஸ்தானில் நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் பாராளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர்.

முதலில் நாடாளுமன்ற வளாகத்தின் பிரதான நுழைவாயிலுக் கருகில் மறியல் போராட்டத்ததில் ஈடுபட்ட அவர்கள் பின்னர் சபாநாயகர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தினர்.

பாகிஸ்தான் பத்திரிகையாளர் கூட்டமைப்பு சங்கம் (PFUJ) எழுத்தாளர் குழுக்கள், எதிர்க்கட்சிகள், சட்டத்தரணிகள் மற்றும் பிரதிநிதிகள் பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாக எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் தெரிவித்துள்ளது.

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் என்பவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கும் பாகிஸ்தான் அரசியலமைப்பின் பிரிவு 19 இற்கு எதிரானதாக உத்தேச சட்டம் அமைவதாக அவை குற்றஞ்சாட்டின.

உத்தேச சட்டம் ஊடகவியலாளர்களை மட்டுமன்றி சிவில் சமூகம், மாணவர்கள், சட்த்தரிணிகள், ஆசிரியர்கள், சட்ட வரைஞர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல், மத ஆர்வலர்கள் மற்றும் நாட்டின் 220 மில்லியன் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக த நியுஸ் இன்டர்நெசனல் தெரிவித்துள்ளது.

(ஏஎன்ஐ)

No comments:

Post a Comment