மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கா விட்டால் ஏற்றுமதி வருமானம் அற்றுப் போகும் - எரான் விக்கிரமரத்ன - News View

Breaking

Monday, September 6, 2021

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கா விட்டால் ஏற்றுமதி வருமானம் அற்றுப் போகும் - எரான் விக்கிரமரத்ன

(எம்.மனோசித்ரா)

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கா விட்டால் , ஜீ.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை நீங்கக் கூடும். அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் ஏற்றுமதி வருமானம் அற்றுப் போகும். அதேவேளை, சுதந்திர வர்த்தக வலய மற்றும் ஏனைய ஆடை தொழிற்துறையில் தொழில் புரிவோருக்கும் வேலை வாய்ப்புக்களை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கு கிடைக்கப் பெறும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையில் 52 சதவீதமானவை ஆடைத் தொழிற்துறை மூலம் கிடைக்கக் பெறுவதாகும். இதன் மூலம் 2020 ஆம் ஆண்டாகும் போது வருடாந்த வருமானம் 2 பில்லியன் யூரோ வரை உயர்வடைந்தது. மனித உரிமை மீறல்களை அரசாங்கம் சரி செய்து கொள்ளா விட்டால் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையும் இல்லாமல் போகக் கூடும்.

அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் ஏற்றுமதி வருமானம் அற்றுப் போகக்கூடிய நிலைமை ஏற்படும். அதேவேளை, சுதந்திர வர்த்தக வலய மற்றும் ஏனைய ஆடைத் தொழிற்துறையில் தொழில் புரிவோருக்கும் வேலை வாய்ப்புக்களை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றார்.

No comments:

Post a Comment