நாட்டின் தற்போதைய சூழலுக்கு அவசரகாலச் சட்டம் அவசியம் - பேராசிரியர் திஸ்ஸ விதாரண - News View

Breaking

Monday, September 6, 2021

நாட்டின் தற்போதைய சூழலுக்கு அவசரகாலச் சட்டம் அவசியம் - பேராசிரியர் திஸ்ஸ விதாரண

(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)

அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு சமமாஜ கட்சி எப்போதும் எதிரான கொள்கையையே கடைப்பிடித்து வருகின்றது. என்றாலும் நாட்டில் தற்போதைய சூழலுக்கு அவசரகாலச் சட்டம் அவசியமாகும். அதனால் இந்த சட்டத்தை தவறான முறையில் பயன்படுத்த எவருக்கும் ஜனாதிபதி இடமளிக்கக் கூடாது என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் நிலைமையில் பசி மற்றும் உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியாது வாழும் மக்களுக்கு எதனையாவது செய்ய வேண்டும். முதலாளித்துவ வாதிகள் எப்போதும் தமது இலாபத்தை தேடிக் கொள்ளவே பார்க்கின்றனர்.

அதனால் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நான் எப்போதும் எதிரானவன். ஆனால், இந்த தருணத்தில் அவசரகாலச் சட்டம் அவசியமாகும் என்றார்.

No comments:

Post a Comment