அமெரிக்காவின் யுனைடட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், கொவிட்-19 தடுப்பூசி போட மறுத்த சுமார் 600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
கொவிட்-19 தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பது அந்நிறுவனத்தின் விதிமுறையாக உள்ளது.
நிறுவனத்தில் வேலை செய்யும் 67,000 பேரில் சுமார் 3 வீதத்தினர், அதாவது 2,000 பேர் மருத்துவ அல்லது சமயக் காரணத்திற்காக அந்த விதிமுறையிலிருந்து விலக்குக் கேட்டுள்ளதாக நிறுவன அதிகாரிகள் கூறினர்.
ஊழியர்கள் அனைவரும் கொவிட்-19 தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று ஓகஸ்ட் மாதம் யுனைடட் ஏர்லைன்ஸ் அறிவித்திருந்தது. அதை அடுத்து, பெரும்பாலான ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகக் கூறப்பட்டது.
இது தொடர்பாக யுனைடெட் ஏயர்லைன்ஸ் நிறுவனம் செவ்வாய்க்கிழமை ஒரு அறிக்கையில், 593 ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தல் திட்டத்துக்கு இணங்கவில்லை என்பதை நாங்கள் உறுதிபடுத்துகிறோம் இதன் விளைவாக, அவர்களை எமது நிறுவனத்திடமிருந்து பிரிப்பதற்கான செயல்முறையை நாங்கள் தொடங்கியுள்ளோம் என்று கூறியுள்ளது.
எனினும் இந்த செயல்முறையில் மருத்துவம் அல்லது மாதவிடாய் விடுமுறைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான காலக்கெடுவை நிறுவனம் நீட்டித்துள்ளது.
“தடுப்பூசி பெறாமல் இருக்க தீர்மானித்துள்ள ஒரு வீதத்திற்கும் குறைவானவர்களை எமது கொள்கையின்படி விமான சேவையில் இருந்து விலக்கி வைக்கும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என்று நிறுவனம் குறிப்பிட்டது.
2020 ஜனவரி முதல், சுமார் 692,274 அமெரிக்கர்கள் கொவிட்-19 தொற்று காரணமாக இறந்துள்ளனர் மற்றும் 43.2 மில்லியனுக்கும் அதிகமான நோய்த்தொற்றுகள் அமெரிக்கா முழுவதும் பதிவாகியுள்ளதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment