கல்கிஸையில் 30 ஆயிரம் சிகரெட் பெட்டிகள், 95 வெளிநாட்டு மதுபான போத்தல்கள், மாணிக்கக்கல்லுடன் ஒருவர் கைது - News View

Breaking

Wednesday, September 1, 2021

கல்கிஸையில் 30 ஆயிரம் சிகரெட் பெட்டிகள், 95 வெளிநாட்டு மதுபான போத்தல்கள், மாணிக்கக்கல்லுடன் ஒருவர் கைது

(எம்.மனோசித்ரா)

கல்கிஸை பொலிஸ் பிரிவின் இரத்மலானை பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் விசேட சுற்றி வளைப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய நேற்று செவ்வாய்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சுங்க வரி செலுத்தப்படாமல் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 30,000 சிகரட் பெட்டிகள், 95 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் மாணிக்கக்கல் என்பவற்றுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டு கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 49 வயதுடைய சந்தேகநபர் கொழும்பு 3 பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

கல்கிஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment