இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் இணையத்தில் விறகு மற்றும் மண் அடுப்பு விற்பனை - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 18, 2021

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் இணையத்தில் விறகு மற்றும் மண் அடுப்பு விற்பனை

நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணத்தினால் இணையத்தள விற்பனை நிறுவனங்கள் ஒன்லைனில் விறகு மற்றும் விறகு அடுப்புக்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

இவ்வாறு வர்த்தகத்தை முன்னெடுக்கும் இலங்கையின் பிரபல்ய நிறுவனமொன்றில் 5 கிலோ கிராம் விறகுகள் 140 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரத்தில் ஒரு மண் அடுப்பும் 5 கிலோ கிராம் விறகுகளும் 390 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது தொடர்பில் பெயர் குறிப்பிடப்படாத இணையத்தளத்தின் தலைவர் தனது முகநூல் பக்கத்தில், "நாங்கள் விறகுகளை ஒன்லைனில் விற்பனை செய்வோம் என்று கற்பனை கூட செய்யவில்லை. இது உண்மையில் வெற்றியளித்துள்ளதாக கூறியுள்ளார்.

No comments:

Post a Comment