ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்கு இஸ்ரேல் நடத்திய தேடுதலின்போது ஏற்பட்ட மோதலில் நான்கு பலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்காக ஜெனின் அகதி முகாமுக்கு இஸ்ரேல் படையினர் நுழைந்தபோது அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த சம்பவத்தில் நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு ஐந்தாமவர் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.
கடந்த மாதங்களில் மேற்குக் கரையில் இடம்பெற்ற வன்முறைகளில் அதிக உயிரிழப்பு பதிவான சம்பவங்களில் ஒன்றாக இது உள்ளது.
இஸ்ரேல் படையினர் பதுங்கி இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான மான் தெரிவித்துள்ளது.
இதில் இஸ்ரேல் வீரர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று இஸ்ரேல் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்தக் கொலைகளை அறுவறுக்கத்தக்க குற்றம் என்று சாடி இருக்கும் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், இது வன்முறையை தூண்டக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.
No comments:
Post a Comment