குறைவான ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை கண்டிப்பாக்கவும் : அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இராணுவத் தளபதி வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 28, 2021

குறைவான ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை கண்டிப்பாக்கவும் : அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இராணுவத் தளபதி வேண்டுகோள்

நாட்டின் தற்போதைய தீவிர கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையை கவனத்திற் கொண்டு உச்ச அளவில் குறைவான ஊழியர்களை சேவைக்கு அழைக்குமாறு சகல நிறுவனங்களுக்கும் கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய கட்டுப்பாட்டு மத்திய நிலையத்தில் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறைந்த அளவு ஊழியர்களை சேவைக்கு அழைக்கும் செயற்பாடுகளை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு சகல அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இராணுவத்தளபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்புக்கான செயற்திட்டங்களை சாத்தியமானதாக முன்னெடுத்துச் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் செயற்படுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்தியாவசிய சேவைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் என்பதை தெரிவித்துள்ள இராணுவத்தளபதி, தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள காலத்தில் விவசாயம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதி தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment