கடந்த ஒன்றரை வருடங்களில் பல தடவைகள் நாடு மூடப்பட்டது. 08 மில்லியன் பேர் முறையான பொருளாதார வழிகளின்றி வாழ்கிறார்கள். அவர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கியது. 8000 கோடிக்கு மேல் அரசாங்கம் அவர்களுக்காக செலவிட்டது. நாடு கஷ்டமான சூழ்நிலைக்கு முகம்கொடுத்துள்ளது. தொடர்ந்து நிவாரணம் வழங்குவதிலும் பிரச்சினை உள்ளது என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெறும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாடு முடக்கப்பட்ட சமயங்களில் தற்காலிகமான தொற்று குறைந்தாலும் போதுமான பலன் கிடைக்கவில்லை. தேவைக்கு ஏற்ப மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்களுக்கு தேவைக்கு ஏற்ப பணியாளர்களை தருவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுகாதாரத் தரப்பின் ஆலோசனைக்கமைய முடிவுகளை எடுக்க பின்நிற்க மாட்டோம்.
சமூக பொருளாதார நிலைமைகள் காரணமாக நாமெடுக்கும் முடிவுகள் கீழ் மட்டம் வரை செயற்படாதது குறித்து கவலையடைகிறோம்.
நாடு முற்றாக மூடப்படுவதால் ஆட்டோ ஓட்டுநர் உட்பட பலர் பாதிக்கப்படுகின்றனர். அதனாலே விருப்பமின்றியேனும் கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறக்க நேரிட்டுள்ளது. மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
இரவில் முடக்கப்பட்டுள்ளது மாத்திரமன்றி பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தடுப்பு மருந்து பெறாத பலர் உள்ளனர். உயிரிழப்போரில் பலர் தடுப்பூசி பெறாதவர்களாவர். தடுப்பூசிதான் ஒரே தீர்வாகும். தேவையான தடுப்பூசி தருவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஒரு மாதத்தில் 12 மில்லியன் பேருக்கு தடுப்பூசி வழங்கப்படும். அதன் பின்னர் இந்த பிரச்சினை படிப்படியாக சீராகுமென எதிர்பார்க்கிறோம் என்றார்.
ஷம்ஸ் பாஹிம்
No comments:
Post a Comment