உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசியல் சூழ்ச்சியாக தெரிவித்த ஷெஹான் மாலக்க கமகேவுக்கு சி.ஐ.டி அழைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, August 26, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசியல் சூழ்ச்சியாக தெரிவித்த ஷெஹான் மாலக்க கமகேவுக்கு சி.ஐ.டி அழைப்பு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து ஊடக சந்திப்பை நடத்தி சர்ச்சைக்குறிய கருத்துக்களை வெளியிட்ட சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கமகே இரண்டாது நாளாகவும் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அiழைக்கப்பட்டிருந்தார்.

இதன் போது ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சில ஆவணங்களுடன், அவர் நேற்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்திருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள்கள் அரசியல் சூழ்ச்சியென்றும் புலனாய்வு பிரிவினர் இணைந்து முன்னெடுத்த சூழ்ச்சியாகவும் என்றும் ஷெஹான் மாலக்க கமகே குறித்த ஊடக சந்திப்பில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இந்த ஊடக சந்திப்பு கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.

இதன் போது அவர் மேலும் குறிப்பிட்டிருந்ததாவது, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள்கள் அரசியல் சூழ்ச்சியாகும். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மற்றும் புலனாய்வு பிரிவினர் இணைந்து முன்னெடுத்த சூழ்ச்சி என்றும் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. இதே போன்று இந்த சம்பவம் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்டோர் இணைந்து முன்னெடுத்த சூழ்ச்சி என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறு இரு வேறுப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் 100 பேருடைய நிலைப்பாடுகள் பெற்றுக் கொள்ளப்பட்டு அவற்றின் மூலம் முன்னெடுக்கப்பட்ட மதிப்பீடுகளுக்கமைய 92 சதவீதமானவர்கள் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக முன்னெடுக்கப்பட்ட சூழ்ச்சி என்று தெரிவித்துள்ளனர். மேலும் 4 சதவீதமானோர் ரிஷாத் பதியுதீன், ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்டோர் இணைந்து முன்னெடுத்த சூழ்ச்சி என்று தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் சரியான பதிலை வழங்கவில்லை.

குறித்த நூறு பேரில் இரு வைத்தியர்கள், 6 சட்டத்தரணிகள், இரு கணக்காளர்கள், வெளிநாட்டவர்கள் மூவர், வெளிநாடுகளிலுள்ள 8 இலங்கையர்கள், 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர் நால்வர், ஊடகங்களில் பணியாற்றும் 12 பேர், மீனவர்கள் நால்வர், இரு முஸ்லிம் மௌலவிகள், பௌத்த மதகுமார் ஐவர், கத்தோலிக்க அருட்தந்தைகள் ஐவர், 30 கத்தோலிக்க மக்கள், 35 பௌத்தர்கள், 25 முஸ்லிம் மக்கள் உள்ளடங்குகின்றனர்.

13 மாவட்டங்களில் உள்ளட்டக்கிய வகையில் நூறு பேரில் 67 சதவீதமானோர் கடந்த தேர்தலில் ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாயவிற்கு வாக்களித்தவர்களாவர். சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த 21 சதவீதமானோரும், அநுரகுமார திஸாநாயக்கவிற்கு வாக்களித்த 6 வீதமானோரும் உள்ளடங்குகின்றனர். மேற்கூறப்பட்ட இரு காரணிகளின் அடிப்படையில் 92 வீதமான மக்கள் ஏன் இவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளனர் என்று நாம் ஆராய்ந்தோம்.

வெளிநாடுகளில் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நான்கு குழுக்கள் என்னை தொடர்பு கொண்டுள்ளனர். இலங்கைக்கு வெளியிலிருந்து அவர்கள் செயற்படுகின்றனர். இது தொடர்பில் தகவல்களை சேகரிப்பதில் அவர்கள் உதவினார்கள்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் 501 மற்றும் 502 ஆம் பக்கங்களில் சமூகத்தில் காணப்பட்ட அதே நிலைப்பாட்டை ஒத்த வகையில், அரச ஊதியம் பெற்ற சஹரான் உள்ளிட்ட குழுவினரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோர் இதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் மூலம் மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது யாதெனில், இதனை புலனாய்வுத் துறையில் ஊதியம் பெற்ற தரப்பினரே சஹரான் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட காலம் முதல் புலனாய்வு துறையுடன் தொடர்புபட்டு ஊதியம் பெற்று வளர்ச்சியடைந்தமையாகும்.

ஒரு வாரத்திற்குள் அல்லது ஒரு மாத்திற்குள் தீர்வினை வழங்குவதாகக் கூறிய போதிலும் , இன்னும் அது நிறைவேற்றப்படவில்லை. பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கைக்கு அமைய 2009 - 2015 காலப்பகுதிலேயே இவர்கள் வளர்ச்சியடைந்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் அரசியல் நிலைப்பாடொன்றை கொண்டவர்கள் என்பது தெளிவாகிறது. இதே போன்று முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக ஊடகங்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளும் இதில் தாக்கம் செலுத்துகின்றன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்த கருத்துக்களின் பின்னரே பாரிய முஸ்லிம் விரோத செயற்பாடுகள் இடம்பெற்றன.

எவ்வாறிருப்பினும் அவரது கருத்துக்கள், தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையவர்களான நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி, டிரான் அலஸ், தேசபந்து தென்னகோன் மற்றும் நிலாந்த ஜயவர்தன உள்ளிட்டவர்களின் செயற்பாடுகளிலும் எமக்கு சந்தேகம் நிலவுகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

No comments:

Post a Comment