தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளரின் கன்னத்தில் மஹிந்தவின் மகன் யோஷித அறைந்தாரா? - News View

Breaking

Thursday, August 26, 2021

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளரின் கன்னத்தில் மஹிந்தவின் மகன் யோஷித அறைந்தாரா?

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் பதவியை பாடகர் இராஜ் வீரரத்ன நேற்றுமுன்தினம் இராஜினாமா செய்திருந்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ஷ அவரை கன்னத்தில் அடித்ததால்த்தான் அவர் பணிப்பாளர் பதவியில் இருந்து விலகினார் என சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகின. இவ்விடயத்தை பிரதமரின் அலுவலக பிரதானியான யோஷித்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.

பாடகர் இராஜ் வீரரத்னவிற்கும், தனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது எனவும் அவரை தான் நீண்ட காலத்திற்கு முன்னதாகவே சந்தித்ததாகவும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் பதவியில இருந்து அவர் விலகுவதற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது, ஆகவே சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தி முற்றிலும் பொய்யானது என யோஷித ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளராக பாடகர் இராஜ் வீரரத்னவை நியமித்தார்.

நேற்று முன்தினம் பாடகர் இராஜ் வீரரத்ன பணிப்பாளர் பதவியை இராஜினமா செய்தார். பதவி விலகலுக்கான உரிய காரணம் இதுவரையில் வெளிப்படுத்தப்படவில்லை.

No comments:

Post a Comment