சகல தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தால் கலந்துகொள்ள தயார் : இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் - News View

Breaking

Saturday, August 14, 2021

சகல தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தால் கலந்துகொள்ள தயார் : இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்

(எம்.மனோசித்ரா)

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் தனித்தனி தொழிற்சங்கங்களாக இன்றி, சகல தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து அமைச்சரவை உப குழு பேச்சுவார்த்தையொன்றுக்கு அழைப்பு விடுக்குமாயின் அதில் கலந்துகொள்ள தயாராக உள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜாசிங்க தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை அமைச்சரவை குழு சில தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது. அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு என்ற அடிப்படையில் நாமும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள தயாராக உள்ளோம்.

தனித்தனியாக இன்றி சகல தொழிற்சங்கங்களுடனும் பொதுவான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையே நாம் எதிர்பார்க்கின்றோம். அடுத்த வாரம் எமக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. இதன்போது எமது நிலைப்பாடுகள் ஸ்திரமாக அறிவிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment