முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் தொடர்பில் கையொப்ப வேட்டை - News View

Breaking

Monday, August 30, 2021

முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் தொடர்பில் கையொப்ப வேட்டை

காதி­ நீ­தி­மன்ற முறை­மை­யையோ, முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்­தையோ இல்­லாமற் செய்ய வேண்டாம். மாறாக காதி நீதி­மன்ற கட்­ட­மைப்பை மேம்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­க­ளையே முன்­னெ­டுக்க வேண்டும் என ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் நீதி­ய­மைச்­சரைக் கோரும் மனுவொன்று தற்போது முஸ்லிம் சமூகத்தினால் கையொப்ப வேட்­டைக்கு விடப்­பட்­டுள்­ளது.

முஸ்லிம் சமூ­கத்தின் புத்­தி­ஜீ­வி­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள இம்­ம­னுவில் 2500 கையொப்­பங்கள் பெற்­றுக் ­கொள்­ளப்­பட்­டுள்­ளன. 

குறிப்­பிட்ட மனுவில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, காதி நீதி­மன்ற கட்­ட­மைப்பில் மாற்­றங்­களைச் செய்­வ­தற்­கா­கவும், முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் குர்­ஆ­னிய சட்­டங்­களை மாற்­றி­ய­மைப்­ப­தற்கும் அமைச்­ச­ர­வையின் அங்­கீ­காரம் பெறப்­பட்டு தற்­போது சட்­ட­வ­ரைஞர் திணைக்­க­ளத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­தோடு முஸ்­லிம்கள் பொதுச் சட்­டத்தின் கீழ் திரு­மண பதிவு செய்து கொள்­வ­தற்கும் அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது. சில முஸ்லிம் பெண்­களின் கோரிக்­கைக்கு அமை­வா­கவே இத்­தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

பல­தார மணம் குர்­ஆ­னிய சட்­ட­மாகும். இது இல்­லாமல் செய்­யப்­பட்­டுள்­ளது. இவை­ய­னைத்தும் முஸ்­லிம்­களை இரண்டாம் தரப் பிர­ஜை­யா­கவே கணிப்­ப­தற்­கா­கவே மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில், தேசிய சூரா கவுன்ஸில் மற்றும் வை.எம்.எம்.ஏ. அமைப்பு என்­பன ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா தலை­மையில் முஸ்லிம் சமூ­கத்தின் நிலைப்­பாட்டை விளக்­கி­யுள்­ளது.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டம் முஸ்­லிம்­களின் உரி­மை­யாகும். நாட்டில் காதி­நீ­தி­மன்ற முறை­மையை மேம்­ப­டுத்த வேண்­டு­மே­யன்றி இல்­லாமற் செய்­யக்­கூ­டாது என மனுவில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

காதி­ நீ­தி­மன்ற முறை­மையை இல்­லாமற் செய்ய வேண்­டு­மென்றோ, பல­தார மணத்தை இல்­லாமற் செய்ய வேண்டும், தடை செய்ய வேண்­டு­மென்றோ அண்மையில் நியமிக்கப்பட்டிருந்த நீதியமைச்சருக்கு இது தொடர்பில் ஆலோசனை வழங்குவதாக நியமிக்கப்பட்ட குழு சிபாரிசு செய்யவில்லை எனவும் மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

(ஏ.ஆர்.ஏ.பரீல்) Vidivelli

No comments:

Post a Comment