தடுப்பூசி பெறுவதை ஊக்குவிப்போம் ! பிற்போக்குவாதிகளின் பொய்ப் பிரசாரங்களை நம்ப வேண்டாம் - News View

About Us

About Us

Breaking

Monday, August 30, 2021

தடுப்பூசி பெறுவதை ஊக்குவிப்போம் ! பிற்போக்குவாதிகளின் பொய்ப் பிரசாரங்களை நம்ப வேண்டாம்

நாடு மிக மோச­மா­­ன­தொரு மருத்­துவ நெருக்­க­டியை நோக்கி நகர்­வ­தாக கடந்த சில தினங்­க­ளாக சுகா­தா­ரத் ­து­றை­யினர் எச்­ச­ரித்து வரு­கின்ற நிலை­யில் அதன் யதார்த்­தங்­களை நாம் இப்­போது உணரத் தொடங்­­கி­யுள்­ளோம். 

நாட்டில் கொவிட் தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 8000 ஐ தொட்டுள்ளது. தற்போது தினமும் சராசரியாக 200 மரணங்கள் பதிவாகின்றன. உலகில் கொவிட் மரண வீதம் அதிகரித்துள்ள முதல் 10 நாடுகளுக்குள் இலங்கை வந்துள்ளமை பெரும் துரதிஷ்டமாகும்.

சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் நடை­பெற்ற நூல் வெளி­யீட்டு நிகழ்வொன்­றில் இணை­ய­ வ­ழி­யாக உரையாற்­றிய ஹொங்­கொங் பல்­க­லைக்­க­ழக பேரா­­சி­ரியர் மலிக் பீரிஸ், அடுத்து வரும் மாதங்கள் இலங்­கைக்கு ‘மிக அபாயமிக்­கவை’ என எச்­ச­ரித்­தி­ரு­ந்தார். தான் ஒரு இலங்­கையன் என்ற வகையில் இதனைக் கூறு­வது தனது பொறுப்பு என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். 

அவ­ரது கூற்­றுப்­படி ஆகஸ்ட் மற்றும் செப்­டம்பர் மாதங்­களில் இலங்­கையில் கொவிட் 19 டெல்டா திரிபின் பரவல் அதிக­மாக இருக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­ற­து. அன்று அவர் கூறியதன் யதார்த்தத்தை இன்று உணர்ந்து வருகிறோம்.

இந்­தி­யாவில் டெல்டா திரிபு ஏற்­ப­டுத்­திய பாதிப்­­பினை நாம் ஊட­கங்கள் வாயி­லாக கண்­டுள்ளோம். அதே நிலை­மையின் சாயல்­களை இப்­போது இலங்­கையில் காண முடி­கி­றது.

நாம் முன்னர் பல தட­வைகள் கூறி­யதைப் போன்று அர­சாங்கம் கொவிட்19 தொற்­றிலிருந்து தனது மக்­களைப் பாது­காப்­பதில் தோல்­வி­ய­டைந்­துள்­ளது என்­ப­தே யதார்த்­த­மாகும். 

தமது அர­சியல் நலன்­களைக் காப்­பாற்றிக் கொள்­வ­திலும் எதி­ரி­களைப் பழி­வாங்­கு­வ­­திலும் சிறு­பான்மை சமூ­­கங்­களை ஓரங்­கட்­டு­வ­திலும் காட்­டிய அக்­க­றையை கொவிட் விட­யத்தில் காட்­டி­யி­ருந்தால் நிச்­ச­ய­மாக இந்தச் சிறிய தீவை கொரோனா எனும் கொடிய நோயி­ட­மி­ருந்து எப்­போ­தோ பாது­காத்­தி­ருக்க முடியும். 

எனினும் நாட்டின் தலை­வர்­களின் தூய்­மை­யற்ற, நீதி­யற்ற செயற்­பாடுகள் தொடர்ந்தும் அவர்­க­ளுக்கு அழி­­வு­க­ளையே தேடிக் கொடுத்துக் கொண்­டி­ருக்­கி­ற­து.

நாட்டின் தேசிய நிலைமை இவ்வாறிருக்க முஸ்லிம் சமூகத்திலும் கொவிட் தொற்றுப் பரவல் ஒப்பீட்டளவில் அதிகரித்தே செல்கிறது. தினமும் கொவிட் தொற்றினால் மரணித்தவர்களின் ஜனாஸா செய்திகளே சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன. 

ஓட்டமாவடி மஜ்மா நகரில் இன்று மாலை வரை 2378 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. தற்போது தினமும் சராசரியாக 40 ஜனாஸாக்கள் அங்கு கொண்டுவரப்படுவதாக கூறப்படுகிறது.

“இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்களின் விகிதாசாரம் சுமார் 10 வீதமாக இருக்கின்ற நிலையில், கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களுள் சுமார் 40 வீதமானோர் முஸ்லிம்களாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும்” என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

“இன்று எம் கண்முன்னே எமது முஸ்லிம் சகோதர, சகோதரிகள் பலர் தினமும் கொவிட் தொற்றினால் மரணித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக முஸ்லிம்கள் நாற்பது, ஐம்பது பேரளவில் உயிரிழந்து வருகின்றனர். இவர்களுள் பெரும்பாலானோர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் என தெரிய வருகிறது. சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் சிலர் இதனை என்னிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். தடுப்பூசி ஏற்றுக் கொள்வது பாதகமானது என்ற தவறான கருத்துக்கள் முஸ்லிம்கள் மத்தியில் பரப்பப்பட்டிருக்கிறது. இதனால் முஸ்லிம்கள் பலர் தடுப்பூசி பெற்றுக் கொள்ள பின்வாங்குகின்றனர். இது குறித்து சுகாதார அமைச்சு மற்றும் பொலிஸ் தரப்பினர் என்னிடம் கவலை வெளியிட்டுள்ளனர்” என்றும் நீதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று முஸ்லிம் சமூகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோரில் அதிகமானோர் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் ஆர்வம் காட்டாததால் அவ்வாறானவர்களின் தரவுகள் தற்போது நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள் மூலம் திரட்டப்பட்டு வருவதாக வக்பு சபையின் தலைவர் சப்ரி ஹலீம்தீன் தெரிவித்துள்ளார்.

மறுபுறம் முஸ்லிம் சமூகத்தில் ஒரு குழுவினர் தடுப்பூசிக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுப்பதையும் அவதானிக்க முடிகிறது. இது மிகவும் ஆபத்தானதாகும். தடுப்பூசி பற்றிய மிகத் தெளிவான மார்க்க மற்றும் சுகாதார வழிகாட்டல்கள் உள்ள நிலையில், இவ்வாறான பிற்போக்குவாதிகளின் பொய்ப் பிரசாரங்களை நம்பி அநியாயமாக உயிர்களைப் பலி கொடுக்கின்ற நிலைக்கு முஸ்லிம் சமூகம் வந்துவிடக் கூடாது. 

எனவேதான் தமது மஹல்லாக்களில் உள்ள அனைவரும் தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதை உறுதிப்படுத்த வேண்டியது பள்ளிவாசல்களின் பொறுப்பாகும் என வலியுறுத்த விரும்புகிறோம்.

Vidivelli

No comments:

Post a Comment