ஆப்கானிஸ்தான் பற்றி ரணில் வெளியிட்டுள்ள அறிக்கை ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் வங்குரோத்து நிலைமையை உறுதி செய்கிறது : சுஹைர், லத்தீப் பாரூக், மாஸ் எல்.யூசுப் ஆகியோர் கூட்டாக கண்டனம் - News View

Breaking

Monday, August 30, 2021

ஆப்கானிஸ்தான் பற்றி ரணில் வெளியிட்டுள்ள அறிக்கை ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் வங்குரோத்து நிலைமையை உறுதி செய்கிறது : சுஹைர், லத்தீப் பாரூக், மாஸ் எல்.யூசுப் ஆகியோர் கூட்டாக கண்டனம்

ஆப்­கா­னிஸ்­தானில் ஏற்­பட்­டுள்ள புதிய அர­சியல் மாற்­றத்தை ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க விமர்­சித்து வெளி­யிட்­டுள்ள அறிக்­கைக்கு ஈரா­னுக்­கான முன்னாள் தூதுவர் எம்.சுஹைர், ஊட­க­வி­ய­லாளர் லத்தீப் பாரூக், சட்­டத்­த­ரணி மாஸ் எல்.யூசுப் ஆகியோர் கூட்­டாக கண்­டனம் தெரி­வித்­துள்­ளனர்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அறிக்கை ஐக்­கிய தேசியக் கட்­சியின் அர­சியல் வங்­கு­ரோத்து நிலை­மையை உறுதி செய்­கி­றது எனவும் அவர்கள் குறிப்­பிட்­டுள்­ளனர்.

சார்க் அங்­கத்­துவ நாடான ஆப்­கா­னிஸ்­தானின் அர­சியல் மாற்­றத்­தினை அர­சாங்கம் அங்­கீ­க­ரித்­துள்ள நிலையில் அதனை ரணில் விக்­கி­ர­ம­சிங்க விமர்­சித்­துள்ளார். 

ஆப்­கா­னிஸ்தான் 43 வருட கால­மாக வெளி­நாட்டு ஆக்­கி­ர­மிப்பில் இருந்­துள்­ளது. இரு யுத்­தங்கள் அவர்கள் மீது திணிக்­கப்­பட்­டுள்­ளன. இதனால் ஆப்­கா­னிஸ்தான் வெளி­நாட்டு ஆக்­கி­ர­மிப்­பினால் பல்­வேறு இன்­னல்­களைச் சந்­தித்­துள்­ளது. மனி­தா­பி­மான ரீதியில் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளது. 

இந்­நி­லை­யிலே ஆப்­கா­னிஸ்­தானின் புதிய அர­சியல் மாற்­றத்­தினை அர­சாங்கம் அங்­கீ­க­ரித்­துள்­ளது. என்­றாலும் இதனை ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் விமர்­சித்­துள்ளார் என மூவரும் கூட்­டாக வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­வித்­துள்­ளனர்.

அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ஆப்­கா­னிஸ்­தானில் நூற்­றுக்­க­ணக்­கான இலங்­கை­யர்கள் உள்­ளனர். அவர்­களின் பாது­காப்பு தொடர்பில் தற்­போது அந்­நாட்டில் அதி­கா­ரத்­தி­லுள்­ள­வர்­க­ளு­டனே பேச்­சு­வார்த்தை நடத்த வேண்டும். 

ஐக்­கிய தேசிய கட்சி ஆப்­கா­னிஸ்தான் வெளி­நாட்டு ஆக்­கி­ர­மிப்­புக்­குள்­ளான போது ஒரு போதும் கண்­டிக்­க­வில்லை. மற்றும் மத்­திய கிழக்கு நாடுகள் வெளி­நாட்டு ஆக்­கி­ர­மிப்பு தொடர்­பிலும் கண்­டிக்­க­வில்லை. தற்­போது ஆப்­கா­னிஸ்தான் மக்கள் தமது நாட்­டினை தங்­க­ளது கட்­டுப்­பாட்­டுக்குக் கீழ் கொண்டு வந்­துள்­ளனர்.

ஐக்­கிய தேசியக் கட்சி பாமியன் புத்தர் சிலை தாக்­கப்­பட்­டதை மீண்டும் நினை­வு­ப­டுத்தி வெறுப்­பு­ணர்ச்­சி­யையும் பகை­மை­யையும் தூண்­டி­விட முயற்­சிக்­கி­றது. ஆனால் இது சாத்­தி­யப்­ப­டாது. முஸ்­லிம்­களும் முஸ்லிம் நாடு­களும் பாமியன் புத்தர் சிலை சிதைக்­கப்­பட்­டதை ஏற்­க­னவே கண்­டித்­துள்­ளன.

6ஆம் நூற்­றாண்டு கால இந்தச் சிலை பாகிஸ்­தானில் இருந்த போது 14 நூற்­றாண்டு கால­மாக ஆப்­கா­னிஸ்­தா­னி­யர்­களால் பாது­காக்­கப்­பட்டு வந்­துள்­ளது. அவர்­க­ளுக்கு இச்­சிலை கார­ண­மாக சுற்­றுலாத் துறை­யினால் வரு­மானம் கிடைத்து வந்­துள்­ளது.

செப்­டெம்பர் 11ஆம் திக­திய தாக்­கு­த­லுக்கும் ஆப்­கா­னிஸ்­தா­னுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அப்­போ­தைய ஆப்­கா­னிஸ்தான் தலி­பானின் தலைவர் முல்லா ஓமர் தெரி­வித்­துள்ளார். 

பாமியன் தாக்­கு­த­லுக்கு முன்பு அமெ­ரிக்­காவும் ஸ்கெண்­டி­நே­வியன் தொடர்­பு­டைய சில வெளி­நாட்­ட­வர்­களும் முல்லா ஓமரை தொடர்பு கொண்­டி­ருக்­கி­றார்கள். சிலையின் புனர்­நிர்­மாணம் தொடர்பில் பேசி­யி­ருக்­கி­றார்கள்.

இந்த சிலை தாக்­குதல் வெளி­நாட்டுச் சக்­தி­க­ளாலே இடம் பெற்­றி­ருக்­கி­றது. ஆப்­கா­னிஸ்தான் ஏஜன்ட் ஊடாக வெளி­நாட்டு சக்­தி­க­ளா­லேயே இந்தச் சிலை தாக்­குதல் நடாத்­தப்­பட்­ட­தாக பரந்­த­ளவில் நம்­பப்­ப­டு­கி­றது. 

தலி­பான்கள் மீது வெறுப்­பு­ணர்ச்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும் முஸ்­லிம்­க­ளையும் பௌத்­தர்­க­ளையும் பிள­வு­ப­டுத்­து­வற்­கா­கவும் இந்த தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

அமெ­ரிக்கா 2001 இல் தலி­பான்­களை களத்தில் தோற்­க­டித்­தமை தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்சி தனது அறிக்­கையில் புறக்­க­ணித்­துள்­ளது. அமெ­ரிக்கா 29.02.2020 இல் தலி­பான்­க­ளுடன் சமா­தான உடன்­ப­டிக்கை செய்து கொண்­ட­மையும் அறிக்­கையில் புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளது.

‘தலி­பான்கள் யுத்­தத்தில் வெற்­றி­யீட்­டி­யுள்­ளார்கள். ஆகையால் நாம் அவர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்த வேண்­டும்’­என ஐரோக்­கிய யூனியன் ஜோசப் பொரெல் தெரி­வித்­துள்ளார்.

ரஷ்யா 1989 இல் இது போன்ற நிலை­மைக்­குள்­ளா­னது. அமெ­ரிக்­கா­வினால் இந்­நி­லை­மைக்­குள்­ளா­னது. ரஷ்ய ஜனா­தி­பதி விலா­டிமிர் புட்டின் கருத்து தெரி­விக்­கையில், ‘வெளி­யி­லி­ருந்து மேற்­கொள்ளும் அந்­நி­யர்­களின் மூடத்­த­ன­மான அணு­கு­மு­றையை முடி­வுக்குக் கொண்டு வர வேண்டும்’ எனத் தெரி­வித்­துள்ளார்.

‘ஆப்­கா­னிஸ்தான் முன்­னே­று­வ­தற்கு சர்­வ­தேச சமூகம் ஒத்­து­ழைக்க வேண்டும்’ என சீன வெளி­வி­வ­கார அமைச்சர் வேங்க் வை தெரி­வித்­துள்ளார். அடி­மைத்­த­னத்தின் விலங்­கினை ஆப்­கா­னிஸ்தான் கழற்­றி­யெ­றிய வேண்­டு­மென பாகிஸ்தான் பிர­தமர் இம்­ரான்கான் தெரி­வித்­துள்ளார்.

பங்­க­ளாதேஷ், ஈரான், கட்டார் துருக்கி மற்றும் சவு+தி அரே­பியா ஆகிய நாடுகள் ஆப்­கா­னிஸ்­தானின் புதிய அர­சாங்­கத்தை அங்­கீ­க­ரிப்­ப­தாக தெளி­வாக குறிப்­பிட்­டுள்­ளன.

ஆசிய நாடு­களை தொடர்ச்­சி­யாக ஆக்­கி­ர­மிப்புச் செய்யும் வெளி­நாட்டுச் சக்­தி­க­ளுக்கு ஆத­ரவு தெரி­விப்­பதில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேர்­மை­யற்­ற­வ­ரா­கவே செயற்பட்டுள்ளார்.

ஐக்­கிய தேசியக் கட்சி தனது தலைவர் இரத்தம் தோய்ந்த சக்­தி­களின் கைப்­பொம்­மை­யாக செயற்­ப­டு­வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆப்­கா­னிஸ்­தா­னி­லி­ருந்து அமெ­ரிக்க, நேட்டோ படைகள் வெளி­யே­றி­யதன் பின்பு யுத்த தள­வா­டங்கள் உற்­பத்­தியின் ஏஜன்ட்கள் அடுத்த யுத்த வல­ய­மொன்­றினைத் தேடு­வார்கள்.

ஐக்­கிய அமெ­ரிக்­காவின் அந்­தனி பிலின்கென் மற்றும் பாது­காப்பு செய­லாளர் வொயிட் ஒஸ்டின் என்போர் தங்கள் இலக்­காக கிழக்­கா­சி­யாவைக் கொண்­டுள்­ளார்கள். இது எங்கள் வல­ய­மாகும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

(ஏ.ஆர்.ஏ.பரீல்) Vidivelli

No comments:

Post a Comment