மலையகத்தில் பலம் பொருந்திய அமைப்பாக இ.தொ.கா இருக்கையில் புதிய தொழிற்சங்கமா? : மனோ எம்.பியின் கருத்துக்கு பெருமாள் பதில் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 8, 2021

மலையகத்தில் பலம் பொருந்திய அமைப்பாக இ.தொ.கா இருக்கையில் புதிய தொழிற்சங்கமா? : மனோ எம்.பியின் கருத்துக்கு பெருமாள் பதில்

மலையகத்தில் பலம் வாய்ந்த தொழிற்சங்கமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இருக்கும்போது, புதிய தொழிற்சங்கம் ஒன்றுக்கான தேவைப்பாடில்லையென இ.தொ.காவின் உப செயலாளர் ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார்.

இ.தொ.காவின் உப செயலாளர் ரூபன் பெருமாள் இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பெருந்தோட்டத் துறையின் பலம் வாய்ந்த தொழிற்சங்க கூட்டமைப்பு விரைவில் உருவாகிறதென பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் நேற்று முன்தினம் ஊடக சந்திப்பு ஒன்றில் கூறியிருந்தார்.

மலையக மக்களின் தொழிற்சங்க சக்தியாகவும் அவர்களின் பாதுகாவலனாகவும் இ.தொ.கா இருக்கும் போது புதிய தொழிற்சங்கம் ஒன்றுக்கான தேவையில்லையென அவர் தெரிவித்துள்ளார்.

ஜீவன் தொண்டமான் மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோரின் தலைமையில் பலம் பொருந்திய தொழிற்சங்கம் மலையகத்தில் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மலையக மக்கள் எந்தவித புதிய தொழிற்சங்களுக்கும் இடம்கொடுக்க மாட்டார்கள். இவ்வாறான நிலையில் புதிய கூட்டணியை அமைப்பதோ அல்லது தொழிற்சங்கத்தை உருவாக்குவதென்பதோ சாத்தியமாகாதென அவர் தெரிவித்துள்ளார்.

இழிப்பறியிலிருந்த 1,000 சம்பளம் உள்ளிட்ட சலுகைகளை அரசாங்கத்தின் மூலம் பெற்றுக் கொடுத்த இ.தொ.கா தொடர்ந்தும் மக்களுக்காக சேவையாற்ற கடமைப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே மலையக மக்களை ஏமாற்றி அவர்களை வஞ்சிக்கும் எந்த தொழிற்சங்கங்களுக்கும் இனிமேல் பெருந்தோட்ட மக்கள் இடமளிக்கமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே புதிய தொழிற்சங்கங்கத்தை உருவாக்கி தொழிலாளர்களை சேர்த்து விடலாம் என மனோ கணேசன் உள்ளிட்ட உறுப்பினர்களின் நினைப்பது ஒருபோதும் சாத்தியமாகாதெனவும் ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார்.

புதிய தொழிற்சங்கம் என கூறி வேகாத பருப்பை மலையகத்தில் வேக வைக்க முற்படுவது கேலியான விடயம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தினகரன் வாரமஞ்சரி 

No comments:

Post a Comment