தற்போதைய கொரோனா நிலைமையை கருத்திற் கொண்டு, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு குறைந்தது 02 வாரங்களுக்கேனும் நாட்டை முடக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இச் சங்கத்தின் தலைவர் ருக்ஷான் பெல்லன இதனைத் தெரிவித்தார். 
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான பெரும்பாலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தவறியமையே தற்போதைய ஆபத்தான நிலைமைக்கு காரணமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆரம்பத்திலிருந்தே கொரோனா தொடர்பில் பல்வேறு எச்சரிக்கைகளை தமது சங்கம் வெளியிட்டு வந்ததாகவும், ஆனால் அரசாங்கம் அதை புறக்கணித்தாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டை முடக்குவதால் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்றாலும், குறைந்தது 02 வாரங்களுக்காவது நாட்டை முடக்க வேண்டும்.
இல்லையென்றால் 02 வாரங்களில் அரசாங்கத்திற்கு ஏற்படும் பொருளாதார பாதிப்பை விட இரு மடங்கான பாதிப்புகள் ஏற்படுமெனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
 
 
 

 
 
 
 
 
.jpeg) 
No comments:
Post a Comment