கொரோனா நிதியத்திற்கு ஒரு கோடி ரூபாவை அன்பளிப்பு செய்த தியாகேந்திரன் - News View

Breaking

Friday, August 27, 2021

கொரோனா நிதியத்திற்கு ஒரு கோடி ரூபாவை அன்பளிப்பு செய்த தியாகேந்திரன்

ஜனாதிபதியின் கொரோனா நிவாரண நிதியத்திற்கு தியாகி அறக்கொடை நிறுவனர் வா. தியாகேந்திரன் நேற்று ஒரு கோடி ரூபாயை பலாலி இராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து வழங்கினார்.

இவர் கடந்த வருடமும் ஒரு கோடி ரூபாவை கொரோனா நிவாரண நிதியத்திற்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர் யாழ் மாவட்டத்தில் சுகாதார வைத்திய கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு பல கோடி ரூபாய்களை தொடர்ச்சியாக வழங்கி வருவதோடு மருத்துவ மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக தினந்தோறும் தன்னை நாடி வருபவர்களுக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்கி வருகின்றார்.

இந்த இக்கட்டான காலகட்டத்தில் 2 கோடி ரூபாயை ஜனாதிபதியின் நிவாரண நிதியத்திற்கு வழங்கிய தனி ஒரு மனிதராக தியாகி திகழ்கின்றார்.

இந்த நிகழ்வில் சிறி லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ் மாவட்ட முக்கியஸ்தர் கந்தசாமி கருணாகரனும் கலந்து கொண்டார்.

No comments:

Post a Comment