நபிக்கு களங்கம் விளைவித்த தவிசாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்ததன் பிரதிபலிப்பு : முஸ்லிம் உறுப்பினர்களை இலக்கு வைத்து பொய்க்கு மேல் பொய்யை கூறும் காரைதீவு தவிசாளர் - பஸ்மீர் விளக்கம் ! - News View

About Us

About Us

Breaking

Friday, August 27, 2021

நபிக்கு களங்கம் விளைவித்த தவிசாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்ததன் பிரதிபலிப்பு : முஸ்லிம் உறுப்பினர்களை இலக்கு வைத்து பொய்க்கு மேல் பொய்யை கூறும் காரைதீவு தவிசாளர் - பஸ்மீர் விளக்கம் !

நூருல் ஹுதா உமர்

காரைதீவு பிரதேச சபை முஸ்லிம் உறுப்பினர்களையும், சுயட்சை குழு உறுப்பினர் குமாராசிரியையும் இலக்கு வைத்து சோடிக்கப்பட்ட பொய்யான கருத்துக்களை கொண்ட காரைதீவு தவிசாளரின் அரசியல் வங்குரோத்து நிலை அண்மைய ஊடக சந்திப்பு அறிக்கைகளுக்கு ஆதாரபூர்வமாக உண்மையான விளக்கங்களை வழங்கி மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். பஸ்மீர் தன்னிலை விளக்கமொன்றை வழங்கியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது, கடந்த 2021.08.23ம் திகதி திங்கட்கிழமை 42 வது சபை அமர்வில் இடம்பெற்றதாக என்மீது சுமத்தப்பட்ட குற்றங்களாக வழமைபோல் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டபோது வழமைக்குமாறாக கூச்சலும் குழப்பமும் தலைதூக்கியது. உறுப்பினர் பஸ்மீர் சபை ஒழுங்கு சட்ட திட்டங்களை மீறி அநாகரீகமான பேச்சுக்களை பேசி குழப்பம் விளைவித்தபோது அவரை வெளியேற்ற உத்தரவு பிறப்பித்தேன். சபை ஊழியர் வெளியேற்றச் சென்றதும் பஸ்மீருக்கு ஆதரவாக சில முஸ்லிம் உறுப்பினர்களும் குமாரசிறி என்ற தமிழ் உறுப்பினரும் கூச்சலிட்டனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே சபை இறைமையை ஒழுங்கை கௌரவத்தை காப்பாற்றுமுகமாக சபையை சட்டத்திற்கமைவாக ஒத்தி வைத்து விட்டு நான் எனது அலுவலகத்திற்கு சென்றேன். என்று தவிசாளர் ஊடக சந்திப்பில் கூறியிருந்தார். இந்த கருத்து பொய்களால் சோடிக்கப்பட்ட ஒன்றாகும்.

இது முற்று முழுதான பொய்யான கருத்துக்களை முன் பின் அறியாமல் சிறுபிள்ளை தனமான பதிவினை காரைதீவு தவிசாளர் கி. ஜெயசிறில் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார். 

சபை அமர்வில் தெரியப்படுத்தும் விடயமாக பிரேரணை 03 குறிப்பிட்ட PSDG நிதியினூடாக ரூபாய் 300,000 பெறுமதியான LED மின்குமிழ் மற்றும் CBG வேலைத்திட்டத்தின் ஊடாக ரூபாய் 300,000 பெறுமதியான LED மின்குமிழ், வீதிப் பெயர் பலகை என்பவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மின்குமிழ் கொள்வனவு செய்யப்பட்டு தவிசாளருக்கு தேவைப்பட்ட சில உறுப்பினர்களுக்கு மாத்திரமே கொடுக்கப்பட்டு காரைதீவு பிரதேச எல்லைக்குள் பூட்டப்பட்டுள்ளதை அறிந்து ஏன் எங்களுக்கு இது விடயமாக தெரியப்படுத்தவோ, எங்களுக்குறிய பங்கு மின்குமிழ் ஏன் தரவில்லை என்று செயலாளரிடம் கேட்டபோது உங்களுக்கு வழங்குமாறு என்னிடம் கூறவில்லை என்றும் தவிசாளரிடம் கேட்குமாரும் கூறினார். 

நான் உடனே தவிசாளருக்கு சபையில் இருந்தபடியே எனது தொலைபேசி ஊடாக மூன்று தடவைகள் தொடர்பை ஏற்படுத்தியும் தவிசாளர் பதிலளிக்கவில்லை. அந்த நேரம் உறுப்பினர் முஸ்தபா ஜலீல் அவர்களும் என்னுடன் இருந்தார். நான் உடனே எழுத்து மூலமாக மின்குமிழ் கொள்வனவு செய்யப்பட்ட விலைமனுவையும் எவ்வாறு பங்கீடு செய்துள்ளீர்கள் என்பதனையும் சபைக்கு முன் எனக்கும் ஏனைய உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலமாக தெரியப்படுத்துமாறு கேட்டிருந்தேன்.

ஆனால் எனக்கு எந்த விதமான பதில்களும் சபையினால் இதுவரைக்கும் வழங்கப்படவில்லை. இதனால் சபை அமர்வில் கேட்டறிந்து கொள்ள தவிசாளரினால் இப் பிரேரணை வாசிக்கப்பட்டதன் பின் இது விடயமாக பேச நேரம் கேட்ட போது தான் தவிசாளர் இது விடயமாக கருத்துக்கள் கூற முடியாது 15 நிமிடத்திற்குள் கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்று சுகாதார தரப்பினர் மற்றும் பொலிஸ் அறிவித்ததாக கூறி நான் பேச வந்த விடயத்தை கூட கேட்காமல் தடுத்தார். 

இந்த சபைக்கு மாதாந்த சம்பளம் ரூபாய் 15,000 பெற நாங்கள் வரவில்லை மக்களுக்கு சேவைகள் செய்யவே எங்களை இங்கு அனுப்பியுள்ளார்கள் அவ்வாறு 15 நிமிடங்களுக்குள் சபையை நடாத்தி முடிக்க வேண்டுமானால் இப் பிரேரணைகள் அனைத்தையும் அடுத்த அமர்வுக்கு ஒத்திப் போடுமாறு கேட்ட போதுதான் உறுப்பினர்களுக்கான சிறப்புரிமையை மீறி சபையை வேறு விதமாக அடாத்தாக சபை விதிகளை மீறி நடாத்த முற்பட்ட போது ஆளுக்கு ஆள் கருத்து முறன்பாடுகள் ஏற்பட்டன.

இது விடயமாக ஏனைய உறுப்பினர்களும் நியாயத்தை தவிசாளரிடம் கேட்ட போதுதான் என்னை வெளியேறுமாறும் நீதி கேட்டதனால் திட்டமிட்டு சபை விதிகளை மீறுவதாக கூறி வழமைக்கு மாற்றமாக சபையில் தின்மக்கழிவகற்றும் ஊழியர்களை கொண்டு அடாத்தாக என்னை வெளியேற்ற ஊழியர்கள் வந்த போதுதான் உறுப்பினர்கள் தடுத்து பேசியதனால் சபையில் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் அதையும் பொறுப்படுத்தாது தான்தோன்றித்தனமாக யாருக்கும் பதில் வழங்காமல் சபையின் பிரேரணைகளை முன்னெடுத்து சென்றார் இதுதான் நடந்தது. 

ஆனால் தவிசாளர் சொல்வது போன்று சபையை இடைநிறுத்தி செல்லவில்லை. அவ்வாறு சென்றிருந்தால் எப்படி இதன் பிறகு வந்த பிரேரணைகள் நிறைவேறி இருக்கும் இதில் இருந்து புரிந்து கொள்ள முடியும். தவிசாளர் பொய்களை கூறியுள்ளதானது இதனால் நிரூபனமாகிறது. இது விடயமாக சபையிக் கூட்டத்தை உறுப்பினர்கள் பேசும் கருத்துக்களை பதிவு செய்வதற்கான ஓடியோ பதிவும் இடம் பெறும் அதனை கேட்டாலும் ஆதாரம், உண்மை விளங்கும்.

முன்னதாக கொரோனாவால் உயிரிழந்த சபை தமிழ் ஊழியரான சுரேந்திரனின் மனைவிக்கும் மாவடிப்பள்ளியில் கொரோனாவால் உயிரிழந்த ஒருவரின் சார்பாக முஸ்லிம் சகோதரி ஒருவருக்கும் சபையில் வேலை வழங்கும் பிரேரணை முன்வைக்கப்பட்டது. முஸ்லிம் பெண்மணிக்கான பிரேரணை முன்வைக்கப்பட்டபோது நானுட்பட அனைத்து தமிழ், முஸ்லிம் உறுப்பினர்களும் ஏகமனதாக ஆதரவளித்தார்கள். அடுத்ததாக சுரேந்திரனின் மனைவிக்கான பிரேரணை முன்வைக்கப்பட்ட போது உப தவிசாளர் ஏ.எம். ஜாஹீர் இனத்துவேசத்தை கக்கியவாறு பலத்த எதிர்ப்பை தெரிவித்து ஆக்ரோசமாகப் பேசினார். அவருக்கு ஆதரவாக பஸ்மீர், ஜலீல் ஆகியோரும் எதிர்ப்புத் தெரிவித்து பேசினர். தமிழ் உறுப்பினர்களில் குமாரசிறியைத் தவிர அனைவரும் அப்பெண்மணிக்கு ஆதரவாக வாக்களித்தனர். என்று தவிசாளர் கூறியிருக்கும் கருத்து முற்றிலும் பொய்யானது.

காரைதீவு பிரதேச சபை ஊழியர் மாவடிப்பள்ளியை சேர்ந்த எவரும் கொரோணாவால் மரணமடையவில்லை என்பதை முதலில் தவிசாளர் தெரிந்து கொள்ள வேண்டும். 

அந்த பிரேரணை 09 குறிப்பிட்ட விடயமானது, எமது சபையில் கடமையாற்றி கொரோணா தொற்றினால் உயிரழந்த திரு.வி.சுரேந்திரன் அவர்களை மனைவியான செ. திவானிசெளத்ரி என்பவரை பதிலீட்டு அடிப்படையில் நியமனம் செய்வதற்காக சபை அனுமதி பெறல். இந்த பிரேரணை வந்த போது வாக்கெடுப்பில் நான் எதிர்த்ததாக தவிசாளர் கூறியுள்ளார் இதுவும் அப்பட்டமான பொய். நான் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்று சபையில் கூறி இருந்தேன். ஆதாரமாக சபை அமர்வில் எடுத்த வீடியோ காட்சி உள்ளது.

அவர் பாவிக்கும் வாகனத்தின் எரிபொருள் 500 லீட்டரை மீள்பரிசீலனை செய்வதற்கு என்னால் கொண்டு வந்த பிரேரணையை சபையில் கொண்டு வந்து வெற்றி பெற்றதனால்தான் அவருக்கு ஆதரவாக இருந்த தமிழ் உறுப்பினர்கள் சபையில் பிரச்சினைகளை ஏற்படுத்தியதால்தான் சபையை ஒத்தி வைத்துவிட்டு சென்றார். ஆனால் பலியை என்மீது சுமத்துகிறார் இந்த தவிசாளர். 

என் மீது கொண்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கி அரசியலில் இருந்தும் நியாயத்தின் பக்கம் ஓங்கி ஒளிக்கும் எனது குரலை தட்டி ஒடுக்கி ஓரம் கட்டலாம் என்று பகல் கனவு காண்கிறார் இந்த தவிசாளர். அது ஒரு போதும் நடக்காது.

முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லாஹ் ஊடாக கொண்டுவரப்பட்ட வன்டு வீதியை காபட் வீதியாக அபிவிருத்தி செய்யும் வேலைகளை நிறுத்துவதற்கு பொய்யான காரணங்களை கூறி தடுப்பதற்கு சபையில் கொண்டு வந்த பிரேரணையை தோற்கடித்ததனாலும், அண்மையில் Reginold Rgi என்ற முகநூல் ஊடாக நமது உயிரிலும் மேலான கண்மனி நாயகம் முஹம்மது நபி (ஸல்) அவர்களை மத நிந்தனை செய்யும் முகமாக பதிவிட்டதை ஒரு பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு அவரின் முகநூலில் பகிர்ந்ததை கண்டித்து நாங்கள் பொலிஸில் முறைப்பாடு செய்து அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதனாலும் குறிப்பாக என் மீது கொண்ட கோபத்தினால் இவ்வாறு முன்னுக்கு பின் முரணாக கருத்துக்களை கூறி வருகின்றார்.

காரைதீவு பிரதேச சபை தவிசாளருக்கு பகிரங்க சவால் விடுகிறேன். என் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை ஆதாரபூர்வமாக தவிசாளர் நிறுபித்தால் எனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யத்தயாராக உள்ளேன்.அவ்வாறு நிறுபிக்க தவறும் பட்சத்தில் தவிசாளர் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யத்தயாரா? என்று சவால் விடுத்துள்ளார் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். பஸ்மீர்.

No comments:

Post a Comment