ரம்புக்கனை பொலிஸ் பிரிவில் கைக் குண்டுகள், உள்நாட்டு, வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது - News View

About Us

About Us

Breaking

Monday, August 30, 2021

ரம்புக்கனை பொலிஸ் பிரிவில் கைக் குண்டுகள், உள்நாட்டு, வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது

(எம்.மனோ சித்ரா)

ரம்புக்கனை பொலிஸ் பிரிவில் எத்வட்டேவத்த பிரதேசத்தில் கேகாலை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதலின்போது வெளிநாட்டில் தயாரிக்கப்படும் கைக் குண்டு, உள்நாட்டில் தயாரிக்கப்படும் ரிவோல்வர் துப்பாக்கிகள் 3, ஏனைய இரு துப்பாக்கிகள், கைவிலங்குகள் 2, 22 வெடிமருந்துகள், 1 கிராம் 330 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் என்பவற்றுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 37 வயதுடைய எத்வட்டேவத்த, ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment