வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள ஊழியர்களிடையே கொவிட்-19 தொற்று நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த திணைக்களம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அகில இலங்கை வன விலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுடன் தொடர்புகளை பேணியவர்களின் தனிமைப்படுத்தலுக்காக தனி இடங்கள் இல்லாத காரணத்தினால் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்துள்ளதாக சங்கத்தின் தலைவர் ஷானுக ரணவக்காராச்சி தெரிவித்தார்.
குறிப்பாக நேற்றைய நிலவரப்படி சிங்கராஜா வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அலுவலகத்தின் அனைத்து ஊழியர்களும் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களால் அந்தப் பகுதியில் தங்கள் கடமைகளைச் செய்ய முடியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் சுமார் 120 ஊழியர்கள் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment