தியத உயன தடுப்பூசி நிலையமும் 3 நாட்களுக்கு 24 மணி நேரம் இயங்கும் : மேல் மாகாணத்தில் 109 இடங்களில் Astra Zeneca 2ஆம் டோஸ் - நாடு முழுவதும் 270 நிலையங்கள் - News View

About Us

Add+Banner

Breaking

  

Monday, August 2, 2021

demo-image

தியத உயன தடுப்பூசி நிலையமும் 3 நாட்களுக்கு 24 மணி நேரம் இயங்கும் : மேல் மாகாணத்தில் 109 இடங்களில் Astra Zeneca 2ஆம் டோஸ் - நாடு முழுவதும் 270 நிலையங்கள்

24-Hour-AstraZeneca-2nd-Dose-at-Diyatha-Uyana-Battaramulla
இலங்கையில் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையின் அடிப்படையில், பத்தரமுல்ல, தியத உயன தடுப்பூசி நிலையத்தில் 24 மணி நேர தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் (NOCPCO) அறிவித்துள்ளது.

இன்று (02) முதல் எதிர்வரும் புதன்கிழமை (04) வரை இவ்வாறு 24 மணி நேரமும் AstraZeneca 2ஆம் டோஸ் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (01) முதல் AstraZeneca 2ஆம் டோஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையின் அடிப்படையில் ஏற்கனவே கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணி நேரமும் AstraZeneca 2ஆம் டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது.

இது தவிர நாடு முழுவதும் இன்றையதினமும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை உள்ளிட்ட மேல் மாகாணத்தில் 109 தடுப்பூசி நிலையங்களில் AstraZeneca 2ஆம் டோஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நடவடிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் 06ஆம் திகதி வரை இடம்பெறும் எனவும், தேவையேற்படின் தொடர்ந்தும் அது நீடிக்கப்படுமெனவும் NOCPCO அறிவித்துள்ளது.

இவ்வாறு தடுப்பூசி பெறுவதற்கு, தங்களது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் தேசிய அடையாள அட்டை மற்றும் ஏற்கனவே தடுப்பூசி வழங்கப்பட்டபோது வழங்கப்பட்ட தடுப்பூசி அட்டை ஆகியவற்றை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்காக தனியான வரிசைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் (NOCPCO) அறிவித்துள்ளது.

அத்துடன், நாடு முழுவதும் ஏனைய மாகாணங்களில் 270 தடுப்பூசி நிலையங்களில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *