லிந்துலையில் 3 நாட்களில் 121 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 29, 2021

லிந்துலையில் 3 நாட்களில் 121 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், கடந்த மூன்று தினங்களுக்குள் 121 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி ஜகத் அபேகுணரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட 225 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளிலேயே 121 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், டயகம போப்பத்தலாவ, ஹோல்புறூக், மெராயா, இராணிவத்தை உள்ளிட்ட பிரதேசங்களிலேயே தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

தொற்றாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் தொற்றாளர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment