இரு தரப்பு ஒத்துழைப்பின் அவசியம் குறித்து இலங்கை - துருக்கி அவதானம் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 29, 2021

இரு தரப்பு ஒத்துழைப்பின் அவசியம் குறித்து இலங்கை - துருக்கி அவதானம்

(எம்.மனோசித்ரா)

கொவிட்-19 தொற்று நோயால் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் நாடுகளிடையேயான ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பின் அவசியம் குறித்து இலங்கை - துருக்கி ஆகிய நாடுகள் இரு தரப்பு அவதானம் செலுத்தியுள்ளன.

இலங்கைக்கான துருக்கிக் குடியரசின் தூதுவர் டிமெட் செகெர்சியோலு மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு அண்மையில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் நடைபெற்றது. இதன்போதே இது குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.

துருக்கியின் வளமான நாகரீக வேர்களையும், உலகிற்கான அதன் ஆர்வமுள்ள கலாச்சாரங்களின் இணக்கமான சகவாழ்வையும் இந்தக் கலந்துரையாடலின்போது அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் எடுத்துரைத்தார்.

அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சாரத் துறைகளில் இலங்கை மற்றும் துருக்கிக்கு இடையேயான இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர், தற்போதுள்ள சிறந்த உறவுகளை மேலும் உயர்த்துவதற்கான இலங்கையின் ஆர்வத்தை மீண்டும் வலியுறுத்தினார்.

புதிய நியமனத்திற்காக அமைச்சருக்கு பாராட்டுக்களை வழங்கி, இலங்கை மற்றும் துருக்கிக்கு இடையேயான பலதரப்பட்ட ஒத்துழைப்பின் வலுவான அரசியல் உறவுகள், வர்த்தகம், முதலீடு, விஞ்ஞானம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளிலான ஒத்துழைப்பின் பன்முகத் தன்மையை தூதுவர் செகெர்சியோலு வலியுறுத்தினார்.

இரு தரப்பு வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், இலங்கைத் தேயிலை ஏற்றுமதிக்கான துருக்கிய சந்தையின் முக்கியத்துவம் குறித்தும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

பலதரப்பு அரங்குகளில் துருக்கி அளித்த ஆதரவுக்காக தனது பாராட்டுக்களைத் தெரிவித்த அமைச்சர், பரஸ்பரம் ஆர்வமுள்ள பகுதிகளிலான ஒத்துழைப்பை வரவேற்றார்.

கொவிட்-19 தொற்றுநோயால் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் நாடுகளிடையேயான ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பின் அவசியம் இந்தக் கலந்துரையாடலின்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இந்தநிலையில், துருக்கி இலங்கைக்கு செயற்கை சுவாச கருவிகள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை இந்த ஆண்டு பெப்ரவரியில் நன்கொடையாக வழங்கியமையை அமைச்சர் நினைவு கூர்ந்தார்.

No comments:

Post a Comment