புத்தளம் தள வைத்தியசாலைக்கு 25 ஒட்சிசன் சிலின்டர்களை பெற்றுக் கொடுத்த வர்த்தகர்கள் - News View

Breaking

Tuesday, August 31, 2021

புத்தளம் தள வைத்தியசாலைக்கு 25 ஒட்சிசன் சிலின்டர்களை பெற்றுக் கொடுத்த வர்த்தகர்கள்

புத்தளம் தள வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஒரு தொகை ஒட்சிசன் சிலின்டர்கள் நேற்றுமுன்தினம் (30) வழங்கப்பட்டுள்ளன.

புத்தளம் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வர்த்தகர்கள் 33 பேர் கூட்டாக ஒன்றிணைந்து குறித்த ஓட்சிசன் சேமிப்பு சிலின்டர்களை வழங்கியுள்ளனர்.

இதன்போது 25 ஒட்சிசன் சேமிப்பு சிலின்டர்கள் புத்தளம் தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியவர் எச்.ஜே.எம்.அர்ஜூன துஷன்னவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

இவ்வாறு வழங்கப்பட்ட குறித்த ஒட்சிசன் சிலின்டர்களை சேமித்து வைத்து புத்தளம் தள வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப்பிரிவில் தங்கிருந்து சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு தேவைப்படும் போது அதனை பயன்படுத்திக்கொள்ள பெரும் உதவியாக இருக்கும் என வைத்தியர்கள் இதன்போது தெரிவித்தனர்.

இந்த ஒட்சிசன் சிலின்டர்கள் வழங்கும் நிகழ்வில் புத்தளம் தள வைத்தியாசலை இருதய வைத்திய நிபுணர் வைத்தியர் மஹேன் பொரளஸ்ஸ, உடல் கூற்று விஷேட வைத்திய நிபுணர் வைத்தியர் யு.டி.என்.பிரசாத், வைத்தியசாலை நிர்வாக உத்தியோகத்தர் கே.பி.ஐ.மல்காந்தி உட்பட வைத்தியர்கள், வர்த்தகர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment