கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்கு மேலும் 20 ஆயிரம் கொவிட்-19 சைனோபாம் தடுப்பூசி கிடைக்கப் பெறவுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.
இத்தடுப்பூசிகள் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு முதன்மை அடிப்படையில் ஏற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள 13 சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகள் தோறும் இத் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
கல்முனை தெற்கு சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்கு 1500 தடுப்பூசிகளும், கல்முனை வடக்கு சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்கு 2000 தடுப்பூசிகளும், சாய்ந்தமருது சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்கு 1500 தடுப்பூசிகளும், காரைதீவு சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்கு 1500 தடுப்பூசிகளும், நிந்தவூர் சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்கு 1500 தடுப்பூசிகளும், அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்கு 1750 தடுப்பூசிகளும், அக்கரைப்பற்று சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்கு 1750 தடுப்பூசிகளும், ஆலையடிவேம்பு சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்கு 1000 தடுப்பூசிகளும், திருக்கோவில் சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்கு 1000 தடுப்பூசிகளும், பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்கு 2000 தடுப்பூசிகளும், சம்மாந்துறை சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்கு 2500 தடுப்பூசிகளும், நாவிதன்வெளி சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்கு 1000 தடுப்பூசிகளும், இறக்காமம் சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்கு 1000 தடுப்பூசிகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
இத் தடுப்பூசிகள் 60 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் கிராம சேவகர் பிரிவுகள் தோறும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள விசேட மையங்களில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், கற்பிணித் தாய்மார்கள், இத் தடுப்பூசி வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.
தடுப்பூசி ஏற்றும் மையங்களுக்கு வர முடியாதவர்களுக்கு கிராம சேவகர்களூடாக தகவல் திரட்டப்பட்டு வீடு வீடாகச் சென்று தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் தடுப்பூசி வழங்கப்படும் மையங்களுக்குச் சென்று முன்னுரிமை அடிப்படையில் தங்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறும், இது தொடர்பாக மேலதிக தகவல் தேவைப்படுவோர் சம்மந்தப்பட்ட சுகாதார வைத்தியதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் பெற்றுக் கொள்ளலாமெனவும் அறிவித்துள்ளார்.
கொவிட்19 தொற்றின் மூன்றாவது அலை மிக வேகமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களை பாதிப்பதால் உடனடியாக தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
(ஒலுவில், காரைதீவு, நற்பிட்டிமுனை நிருபா்கள்)
No comments:
Post a Comment