கொலை சந்தேகநபர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்லாது இருக்க யாழ் நீதிமன்றம் தடை உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Thursday, August 26, 2021

கொலை சந்தேகநபர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்லாது இருக்க யாழ் நீதிமன்றம் தடை உத்தரவு

கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட முக்கிய சந்தேகநபர்கள் நாட்டை விட்டு தப்பி செல்லாது இருக்க விமான நிலையம் மற்றும் கடற்படையினருக்கு யாழ் நீதவான் பீற்றர் போல் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

யாழில் கடந்த ஞாயிற்றுகிழமை (22) யாழ் குருநகரைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை யாழில் நீண்ட காலமாக இயங்கி வரும் கெமி வாள் வெட்டுக் குழுவினர் பட்டப்பகலில் நடு வீதியில் வைத்து வாளால் வெட்டி இரும்பு கம்பியால் தாக்கி, கொலை செய்தனர்.

இச் சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் உயிரிழந்தார். குறித்த கெமி வாள் வெட்டு குழுவில் 15 பேர் வரையில் குறித்த சம்பவத்தில் தொடர்புபட்டதாக சாட்சிகள் தெரிவித்த நிலையில் அவர்கள் எவரும் இதுவரை பொலிஸாரால் கைது செய்யப்படவில்லை.

குறித்த வாள் வெட்டு வன்முறைகள் கடந்த 2 ஆண்டுகளாக இடம்பெற்று வந்தன. குருநகரைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை கெமி குழு தலைவர் தாக்கியதை கண்ட நண்பர்கள் கெமியை தாக்கினர். 

இதனால் ஆத்திரமடைந்த கெமி குழுவினர் குறித்த இளைஞர்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக தேடி தேடி வாளால் வெட்ட ஆரம்பித்தனர். இதனால் பல பேர் வாள் வெட்டு காயங்களிற்கு உள்ளாகினர். 

எனினும் கெமி குழுவினர் குறித்த வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்படாமல் சாதாரணமான முறையில் சுற்றித் திரிந்துள்ளனர். 

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை குறித்த இளைஞனை அவரின் நண்பனை மிரட்டி அப்பகுதிக்கு வரவழைத்து கிட்டத்தட்ட 15 பேரிற்கு மேற்பட்ட வாள் வெட்டு குழுவினரால் வெட்டி வீழ்த்தப்பட்டார்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபர்கள் கடல் வழியாக தப்பி விடக்கூடும் என்ற நிலை காணப்பட்டதால் குறித்த நபர்கள் நாட்டை விட்டு தப்பாமல் இருக்க நீதவானால் குறித்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வேலணை நிருபர்

No comments:

Post a Comment