2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடர் நிறைவுக்கு வந்துள்ளது. கொவிட் தொற்று காரணமாக கடந்த வருடம் இடம்பெற வேண்டிய இவ்விளையாட்டுத் தொடரானது, இவ்வருடம் ஜூலை 23ஆம் திகதி ஆரம்பமாகி இன்று (08) நிறைவுக்கு வந்துள்ளது.
அந்த வகையில், இத்தொடர் முழுவதும் தனது ஆதிக்கத்தை செலுத்தி, பதக்கப்பட்டியலில் தொடர்ந்தும் முதலிடத்தில் இருந்து வந்த சீனா, இறுதியாக ஒரு தங்கப் பதக்க வித்தியாசத்தில் (38) இரண்டாமிடத்தை பெற்றுள்ளது. போட்டித் தொடரை நடாத்திய ஜப்பான் (27) மூன்றாவது இடத்தையும், அமெரிக்கா (39) முதலிடத்தையும் பெற்றுள்ளன.
இலங்கைக்கு இம்முறை எவ்வித பதக்கங்களும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய நாடுகளில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் உள்ளிட்ட 7 பதக்கங்கள் பெற்ற இந்தியா 48 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
இப்பதக்கப் பட்டியலில் 93 நாடுகள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளதோடு, இறுதி இடமான 86 இடத்தில் ஒரு வெண்கல பதக்கத்தை மாத்திரம் பெற்ற 8 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அந்த வகையில் முதல் மூன்று இடங்களில், >>பதக்கப்பட்டியல்<<
அமெரிக்கா
39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் (113 பதக்கங்கள்)
சீனா
38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம் (88 பதக்கங்கள்)
ஜப்பான்
27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் (58 பதக்கங்கள்)
No comments:
Post a Comment