இதுவரை தடுப்பூசி பெறாத மேல் மாகாணத்தின் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1906 அழைக்கவும் - News View

Breaking

Sunday, August 8, 2021

இதுவரை தடுப்பூசி பெறாத மேல் மாகாணத்தின் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1906 அழைக்கவும்

இதுவரை கொவிட் தடுப்பூசியின் முதல் டோசை பெற்றுக் கொள்ளாத, மேல் மாகாணத்திலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் சிக்கலான நோய்கள் கொண்டவர்கள் 1906 எனும் இலக்கத்தை அழைத்து பதிவு செய்யுமாறு அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 3 நாட்களுக்கு அவர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெற சிறந்த தீர்வு தடுப்பூசி பெறுவதாகுமென திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad