(எம்.மனோசித்ரா)
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாத அரசாங்கம் அதனை நிவர்த்தி செய்வதற்கான ஒரு வழிமுறையாக அளவுக்கதிகமாக நாணயத்தாள்களை அச்சிடுவதை பிரதானமாகக் கொண்டுள்ளது. அதற்கமைய தற்போதைய அரசாங்கத்தினால் இதுவரையில் ஒரு கோடி இலட்சம் ரூபாய் (ஒரு ட்ரில்லியன்) நாணத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன.
அத்தோடு அண்மையில் ஒரே நாளில் 20,000 கோடி ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நாடு இவ்வாறான நிலையில் தொடர்ந்தும் பயணிக்க இடமளிக்கக் கூடாது. எனவே நாட்டை சிறந்த முறையில் முன்னோக்கிக் கொண்டு செல்ல ஆட்சியை பொறுப்பேற்க தேசிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் 2019 இல் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்த மக்கள், அதனையடுத்து பொதுத் தேர்தலிலும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினர். எனினும் அவர் ஆட்சியைப் பொறுப்பேற்று ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள போதிலும் , மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை என்றார்.
No comments:
Post a Comment