கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Monday, July 26, 2021

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் போராட்டம்

அவுஸ்திரேலியாவில் விக்டோரியா, குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய 3 மாகாணங்களிலும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதையடுத்து அரசாங்கத்தின் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கோபமடைந்த அவுஸ்திரேலிய மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சிட்னி, மெல்பேர்ண், பிரிஸ்போர்ண் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

சிட்னி நகரில்‌ பேரணியாக சென்ற ஆயிரக்கணக்கான மக்கள்‌ வீதிகளில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்களில் சிலர் “முகக் கவசத்தை இறக்கி விட்டு உங்கள் குரலை உயர்த்துங்கள்” “அவுஸ்திரேலியாவை தட்டி எழுப்புங்கள்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே பொலிசார் போராட்டத்தை கலைக்க முயன்றபோது போராட்டக்காரர்களுக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

போராட்டக்காரர்கள் பொலிசாரை நோக்கி தண்ணீர் போத்தல்கள், கற்கள் உள்ளிட்டவற்றை வீசி எறிந்தனர்.‌ இதில் பொலிஸ் அதிகாரிகள் பலர் படுகாயமடைந்தனர்.‌

இதற்கிடையில் இந்தப் போராட்டம் தொடர்பாக 100 க்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment