மீண்டும் முதலிடத்தை பிடித்தார் கேன் வில்லியம்சன் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 1, 2021

மீண்டும் முதலிடத்தை பிடித்தார் கேன் வில்லியம்சன்

நியூஸிலாந்து கிரிக்கெட் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் எம்.ஆர்.எஃப் டயர்ஸ் ஐ.சி.சி ஆண்கள் டெஸ்ட் பிளேயர் தர வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

கேன் வில்லியம்சன் கடந்த வாரம் சவுத்தாம்ப்டனில் நடந்த ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல, தனது அணியை வழிநடத்திய பின்னர் ஐ.சி.சி ஆண்கள் டெஸ்ட் பிளேயர் தரவரிசையில் முதலிடத்தை மீட்டுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 30 வயதான கேன் வில்லியம்சன் பெற்றுக் கொண்ட 49 மற்றும் 52 ஓட்டங்கள் 900 புள்ளிகளை கடக்க வழிவகுத்தது.

இப்போது அவர் ஸ்டீவ் ஸ்மித்தை விட (891 மதிப்பீட்டு புள்ளிகள்) கூடுதலாக 10 புள்ளிகளை பெற்று முதலிடத்திற்கு வந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் போது 2015 நவம்பரில் முதன்முதலில் ஐ.சி.சி ஆண்கள் டெஸ்ட் பிளேயர் தரவரிசையில் முதலிடத்தை கேன் வில்லியம்சன் பிடித்திருந்தார்.

எவ்வாறெனினும் நியூஸதிலாந்து அணி ஐ.சி.சி ஆண்கள் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment