அமெரிக்காவில் வெடிப்புச் சம்பவம் - 17 பேர் காயம் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 1, 2021

அமெரிக்காவில் வெடிப்புச் சம்பவம் - 17 பேர் காயம்

அமெரிக்க, லாஸ் ஏஞ்சல்ஸில் புதன்கிழமை பொலிஸ் வெடி குண்டு அகற்றும் ட்ரக்கிற்குள் ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த 17 பேரில் ஏழு பேர் வெடி குண்டு அகற்றலுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றைய ஏழு பேர் பொதுமக்கள் ஆவார் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறை தலைவர் மைக்கேல் மூர் கூறினார்.

அதேநேரம் காயமடைந்தவர்களின் நிலை குறித்து அவர் மேலும் விவரிக்கவில்லை.

தெற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் சுற்றுப்புறத்தில் புதன்கிழமை மாலை சட்டவிரோத பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க முயற்சித்தபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்கச் செய்வது ஏன் தோல்வியுற்றது என்பது குறித்து உடனடித் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

வெடிப்பின் தாக்கம் அருகிலுள்ள கார்களை அழித்தது, அருகிலுள்ள கட்டிடங்களை சேதப்படுத்தியுமுள்ளது.

No comments:

Post a Comment