ஆபிரிக்கா நாடுகளைப் போன்று மிகவும் பின்தங்கிய நிலைக்கு சென்றுள்ள ஒரேயொரு ஆசிய நாடு இலங்கை : இம்தியாஸ் பாகீர் மாக்கார் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 1, 2021

ஆபிரிக்கா நாடுகளைப் போன்று மிகவும் பின்தங்கிய நிலைக்கு சென்றுள்ள ஒரேயொரு ஆசிய நாடு இலங்கை : இம்தியாஸ் பாகீர் மாக்கார்

(எம்.மனோசித்ரா)

ஆபிரிக்கா நாடுகளைப் போன்று மிகவும் பின்தங்கிய நிலைக்கு சென்றுள்ள ஒரேயொரு ஆசிய நாடு இலங்கை மாத்திரமேயாகும். இந்த நிலைமையை மாற்றியமைக்கக் கூடிய மாற்று திட்டம் ஐக்கிய மக்கள் சக்தியிடம் காணப்படுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகீர் மாக்கார் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், தற்போதைய அரசாங்கத்தைப் போன்று ஐக்கிய மக்கள் சக்தி குறுகிய அரசியல் நோக்கத்திற்காக செயற்படுவதில்லை. நாட்டுக்கும் மக்களுக்கும் முதலிடம் என்ற அடிப்படையிலேயே செயற்படுகிறது. எனவே நாட்டுக்கு எந்த ஆட்சியாளர்கள் தேவை என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.

அந்நிய செலாவணி இருப்பு குறைவடைந்துள்ளதால் மத்திய வங்கி வாராந்த அறிக்கையில் அது தொடர்பான அறிவித்தல் நீக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறாகும். 

இவ்வாறு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் மேலும் மேலும் நாணயத்தாள்களை அச்சிட்டு இலங்கை ரூபாவின் பெறுமதியை வீழ்ச்சியடைச் செய்கின்றனர்.

அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிடுபவர்கள் கைது செய்யப்படுதல் உள்ளிட்ட அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை அற்றுப்போகக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே அரசாங்கம் இனியாவது பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

No comments:

Post a Comment