ரஷ்யாவில் கிளைகளை திறக்க வெளிநாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை கட்டாயப்படுத்தும் புதியதோர் சட்ட மூலத்தில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வியாழனன்று கையெழுத்திட்டுள்ளார்.
வெளிநாட்டு சமூக ஊடக நிறுவனங்களான பேஸ்புக், யூடியூப் மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட ஏனைய நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் மூலம் ரஷ்யாவில் கிளைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய சட்டத்தின் படி வெளிநாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் வலைத்தளங்களில் தினசரி பார்வையாளர்களின் எண்ணிக்கை 500 ஆயிரம் ரஷ்ய பயனர்களைத் தாண்டினால் ரஷ்யாவில் கிளைகளை திறக்க வேண்டும்.
அத்தகைய இணைய சேவைகளின் உரிமையாளர்கள் 2022 ஜனவரி 1 முதல் நாட்டில் சட்டப்பூர்வ நிறுவனங்களை நிறுவ வேண்டும்.
No comments:
Post a Comment