தடுப்பூசி மேம்பாட்டுக்கான அறிவை ஈரான், இந்தியா பரிமாறிக் கொள்ளும் : இர்னா செய்தி நிறுவனத்தை மேற்கோள்காட்டி ‘தெஹ்ரான் ரைம்ஸ்’ செய்தி - News View

About Us

About Us

Breaking

Sunday, July 4, 2021

தடுப்பூசி மேம்பாட்டுக்கான அறிவை ஈரான், இந்தியா பரிமாறிக் கொள்ளும் : இர்னா செய்தி நிறுவனத்தை மேற்கோள்காட்டி ‘தெஹ்ரான் ரைம்ஸ்’ செய்தி

ரொட்டா வைரஸ் தடுப்பூசியின் தொழில்நுட்ப அறிவை மாற்ற ஈரானின் பாஸ்டர் நிறுவனமும் இந்தியன் பாரத் பயோ டெக் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (எம்.ஓ.யூ) பதிவு செய்துள்ளதாக ஈரானின் இர்னா செய்தி நிறுவனத்தை மேற்கோள்காட்டி ‘தெஹ்ரான் ரைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

ரோட்டா வைரஸ் தடுப்பூசியானது இவ்வைரஸ் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு தடுப்பூசி ஆகும். 

இந்த வைரஸ் சிறு குழந்தைகளிடையே கடுமையான வயிற்றுப்போக்கை ஏற்படுத்தக்கூடியதாகும். இத்தடுப்பூசிகள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் 15-34 சதவீத தீவிர வயிற்றுப்போக்கையும், அபிவிருத்தி அடைந்த நாடுகளில் 37-96 சதவீத தீவிர வயிற்றுப்போக்கையும் தடுக்கின்றன.

ரோட்டா வைரஸ் தடுப்பூசி துறையில் கூட்டு ஒத்துழைப்புக்காக பாரத் நிறுவனத்துடன் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்த பேச்சுவார்த்தைத் தொடர்ந்து, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பாஷர் நிறுவனத்தின் தலைவர் அலிரெஸா பிக்லாரியும் பாரத் பயோடெக் இயக்குனர் கிருஷ்ணா எல்லாவும் மெய்நிகர் கூட்டத்தில் கையெழுத்திட்டுள்ளனர். 

இந்த நடவடிக்கையின் மூலம், குழந்தைகளின் வெளிநோயாளர் மற்றும் உள்நோயாளர் எண்ணிக்கையைப் பெரிதும் குறைத்துக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரோட்டா வைரஸ் தடுப்பூசி உற்பத்திக்கான தொழில்நுட்பத்தை ஈரானுக்கு வழங்கவும், தடுப்பூசியின் உள்நாட்டு உற்பத்திக்கு இரு தரப்பினரும் ஒத்துழைப்பர் என்றும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்புரிந்துணர்வு உடன்படிக்கை அமர்வில், சுகாதாரத் துறையில் இரு தரப்பினரும் உறவுகளை வளர்ப்பதற்கும், தடுப்பூசிகளை இணைந்து உற்பத்தி செய்வதற்கும் தங்கள் தயார்நிலையையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தினர்.

இந்தியாவின் ஈரானிய தூதர் அலி செக்னி, நிறுவனத்தின் திறன்களைப் பாராட்டி, தடுப்பூசிகளின் கூட்டு உற்பத்திக்கு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இவ்வைரஸ் தொற்றானது குழந்தை மத்தியிலான வயிற்றுப்போக்குடன் தொடர்புடைய முக்கிய நோயாகும். 

இது உயர் இறப்பு விகிதத்திற்கான (ஆண்டுக்கு 440,000 இறப்புகள்) முக்கிய காரணங்களில் ஒன்றாக விளங்குவதோடு, ஒவ்வொரு வருடமும் குறிப்பாக குளிர்காலத்தில் 25 மில்லியன் பேர் சிகிச்சை பெற வருகை தருவதுடன் 2 மில்லியன் பேர் மருத்துவமனைகளில் தங்கி இருந்து சிகிச்சை பெறுகின்றனர்.

ஈரானில் இவ்வைரஸ் தொற்று பாதிப்பு 30.50 சதவீதமென மதிப்பிடப்பட்டுள்ளது, சராசரி பாதிப்பு 39.9 சதவீதமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையின்படி, ஈரானில், இரைப்பை அழற்சியின் 42 சதவிகிதம் ரோட்டா வைரஸால் ஏற்படுகிறது, அவை முறையே 2008 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் சுமார் 2000 மற்றும் 270 இறப்புகளை ஏற்படுத்தியுள்ளன எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment