இந்தியாவில் உருமாற்றம் அடைந்த டெல்டா கொரோனா வைரஸ் உலகின் 96 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் கடந்த வாரம் 11 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் உருமாற்றமடைந்த B.1.617 எனும் கொரோனா வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டது. இந்த உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் உலகின் 96 நாடுகளில் தற்போது பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேபோல் பிரிட்டன், தென்னாபிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
உருமாறிய டெல்டா, "இரட்டை விகாரி " என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது இரண்டு பிறழ்வுகளைக் கொண்டுள்ளது, இது உருமாறிய ஆல்பா வைரஸை விட 55 சதவீதம் அதிகமாக பரவக்கூடியது (ஆரம்பத்தில் பிரித்தானியால் கண்டறியப்பட்டது) மற்றும் இது உலகளவில் கொரோனா வைரஸின் ஆதிக்கம் செலுத்தும் விகாரமாக மாறும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
டெல்டா வைரஸ் தற்போது பரவியுள்ள 11 நாடுகளில் துனிசியா, மொசாம்பிக், உகாண்டா, நைஜீரியா மற்றும் மலாவி ஆகிய நாடுகளில் புதிய திரிபின் தீவிர பரவல் இருப்பதாக ஆப்பிரிக்கா தெரிவித்துள்ளது.
தரவுகளின் படி ஆபிக்க கண்டத்தில் தொற்றாளர்களும், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது.
மேலும், ஸ்கொட்லாந்து நாட்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், உருமாறிய டெல்டா கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிக்கும் விகிதம் உருமாறிய ஆல்பா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை விட 85 சதவீதம் அதிகம் என கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச மருத்துவ இதழான லான்செட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
டெல்டா வைரஸ் பரவல் காரணமாக அவுஸ்திரேலியாவில் சில நகரங்கள் முடக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் ஜூன் 27 முதல் இரண்டு வாரங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று தன்மையைக் கருத்தில் கொண்டு, எல்லை தாண்டிய பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment