பாரிய மாத்தளை நீர் வழங்கல் திட்டத்தை திறந்து வைத்தார் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ : 31,000 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, July 29, 2021

பாரிய மாத்தளை நீர் வழங்கல் திட்டத்தை திறந்து வைத்தார் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ : 31,000 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிப்பு

(பர்வீன்)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கரங்களால் பாரிய மாத்தளை நீர் வழங்கல் திட்டம் கடந்த புதன்கிழமை (28) அலறி மாளிகையில் இருந்து நேரலைக்கூடாக மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது. 

இந்த நீர் வழங்கல் திட்டமானது 31,000 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களின் பூரண ஒத்துழைப்புடன் துரிதமாக இத்திட்டம் நிறைவு செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இந்த நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் அம்பங்கங்க, உக்குவளை மற்றும் உடதென்ன ஆகிய மூன்று நீர் வழங்கல் திட்டங்கள் இந்த பாரிய நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் உள்ளடங்குவது குறிப்பிடத்தக்கதாகும்.
சுத்தமான குடிநீர் பெற்றுக் கொள்ள முடியாமல் மிகவும் கஷ்டத்துடன் வாழ்ந்த மாத்தளை, ரத்தோட்ட, யடவத்த, உக்குவெல, பல்லேபொல, அம்பன்கங மற்றும் நாவுல ஆகிய பிரதேசங்களில் வாழும் பொதுமக்களுக்கு இந்த குடிநீர் திட்டத்தின் மூலம் பயனடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மில்லியன் 5,440 ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அம்பன்கங நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் அண்ணளவாக 20,000 குடிநீர் இணைப்புகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுத்தமான குடிநீரை 76,740 குடும்பங்கள் பயன்பெற உள்ளன. பெறவுள்ளன. 

பல்லேபொல, யடவத்த, நாவுல, மாத்தளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளின் கீழ் உள்ள 115 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் பொது மக்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள். அவ்வாறே ரஜ்ஜம்மன, வல்மோறுவ, மஹவலகந்த ஆகிய பிரதேசங்களில் அதிக கொள்ளளவினைக் கொண்ட மூன்று (03) நீர் தாங்கிகள் அமைக்கப்பட்டு நாளொன்றுக்கு 18,000 கனமீற்றர் சுத்திகரிக்கப்பட்ட தூய குடிநீரினை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
உக்குவெல நீர் வழங்கல் திட்டமானது பாரிய மாத்தளை நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் உள்ளடங்கிய மற்றொரு நீர் வழங்கல் திட்டமாகும். மில்லியன் 3,150 ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் அண்ணளவாக 8,000 குடிநீர் இணைப்புகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் சுத்தமான குடிநீர் 31,908 குடும்பங்கள் பயன்பெற உள்ளன. உக்குவெல பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 22 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் பொதுமக்கள் இதன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடி நீரைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அவ்வாறே பாரிய மாத்தளை நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் உள்ள மற்றொரு நீர் வழங்கல் திட்டம் உடத்தென்ன நீர் வழங்கல் திட்டமாகும்.

இந்த நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் சுத்தமான குடிநீர் 47,918 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 12,000 இணைப்புகள் வழங்கப்படவுள்ளன. உக்குவெல மற்றும் ரத்தோட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 37 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் பொதுமக்கள் இதன் மூலம் பயன்பெறும் வகையில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 
உடத்தென்ன மற்றும் பன்சல் தென்ன ஆகிய பிரதேசங்களில் நிர்மாணிக்கப்படும் கனமீற்றர் 1,090 மற்றும் கனமீற்றர் 800 கொள்ளளவினை நீர் தாங்கிகள் மூலம் இப்பிரதேசங்களில் நீர் வழங்கல் மேற்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக 3,250 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இந்த நீர் வழங்கல் திட்டமானது முற்றாக நிறைவு பெருமிடத்து மாத்தளை மாவட்டத்தின் குழாய் வழியில் தற்போது 30% வழங்கப்படும் குடிநீர் 90% நிலப்பரப்பில் விஸ்தரிக்கப்பட்டதாக அமையும்.

கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ சனத் நிசாந்த, இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லாவெர்டு (Eric Lavertu) லாவெர்டு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் கலாநிதி ப்ரியன் பந்து விக்ரம ஆகியோர் இங்கு உரை நிகழ்த்தினார்கள்.

No comments:

Post a Comment