தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்ட விமல் வீரவன்ச : 14 நாட்களுக்கு கைத்தொழில் அமைச்சு அலுவலகத்திற்கும் பூட்டு - News View

Breaking

Thursday, July 29, 2021

தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்ட விமல் வீரவன்ச : 14 நாட்களுக்கு கைத்தொழில் அமைச்சு அலுவலகத்திற்கும் பூட்டு

தனது பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு கொவிட்-19 தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதன் காரணமாக, இன்று முதல் 14 நாட்களுக்கு தன்னை சுய தனிமைப்படுத்திக் கொள்ளப் போவதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரிகளின் தொடர்பாளர்கள் எனும் வகையிலும், சமூக கடமையின் அடிப்படையிலும் இன்று (29) முதல் 14 நாட்களுக்கு தான் வீட்டிலிருந்து தனிமைப்படுத்திக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கைத்தொழில் அமைச்சின் தனது அமைச்சு காரியாலயத்தையும் தொற்றுநீக்கும் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் 14 நாட்களுக்கு தனது அமைச்சு அலுவலகத்தையும் மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆயினும் அமைச்சின் நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறுமென தெரிவித்துள்ள அவர், அமைச்சிற்கு வராமல் முடியுமான வகையில் தொலைதூர முறைமைகளின் ஊடாக சேவைகளை பெறுமாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment