இலங்கையில் ஜூன் மாதத்தில் ஏற்பட்ட கொவிட்-19 தொற்று உயிரிழப்பு எண்ணிக்கையின் திடீர் அதிகரிப்பு குறித்து ஆய்வு செய்ய சுகாதார நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
நாட்டில் ஆல்பா / பிரிட்டன் மாறுபாடு கண்டறியப்பட்டதன் விளைவாக ஜூன் மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான கொவிட்-19 தொற்று உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜூன் மாதத்தில் மாத்திரம் சுமார் 1500 கொவிட் தொற்று உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அதற்கு முன்னர் மே மாததில் 806 உயிரழப்புகளும், ஏப்ரல் மாத்தில் 110 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
ஆகவே, ஜூன் மாதத்தில் கொவிட் உயிரிழப்புகள் கணிசமாக அதிகரித்தமைக்கான காரணத்தை விசாரிக்க ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது என டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
அதேநேரம் கொரோனா வைரஸின் மிகவும் ஆபத்தான டெல்டா / இந்திய மாறுபாடு இலங்கைக்குள் நுழைந்துள்ளமையினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் பொது மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
No comments:
Post a Comment