பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பறவைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளுடன் ஒருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Saturday, June 12, 2021

பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பறவைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளுடன் ஒருவர் கைது

செ.தேன்மொழி

குவைத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பத்து இலட்சம் பெறுமதியான பறவைகளுக்கு வழங்கப்படும் ஒளடதங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு வடக்கு பிரிவைச் சேர்ந்த குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் அனுமதியின்றி நாட்டுக்குள் சில ஒளடதங்கள் எடுத்து வரப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, கொழும்பு - 13, ஜம்பட்டா வீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 38 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான பறவைகளுக்கு வழங்கப்படும் பெருந்தொகையான ஒளடதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர் ஒளடதங்களை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கொழும்பு வடக்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment