மொட்டு அரசாங்கம் ஒரு தேசிய அவமானம் - கடுமையாக சாடியுள்ள சஜித் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 12, 2021

மொட்டு அரசாங்கம் ஒரு தேசிய அவமானம் - கடுமையாக சாடியுள்ள சஜித்

எம்.மனோசித்ரா

பொதுஜன பெரமுன அரசாங்கம் ஒரு தேசிய அவமானமாகும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக சாடியுள்ளதோடு, உங்களால் முடியவில்லை என்றால் முடியாது எனக் கூறுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருட்களின் விலை நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளமையின் காரணமாகவே அவர் இவ்வாறு அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.

இது குறித்து டுவிட்டர் பதிவொன்றை செய்துள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, 'பொஹொட்டுவ அரசாங்கமே வெட்கமாக இருக்கிறது. நீங்கள் ஒரு தேசிய அவமானம். உங்களால் நிர்வகிக்க முடியாவிட்டால் முடியாது என்று கூறுங்கள். ஐக்கிய மக்கள் சக்தி செழிப்பான மற்றும் அபிவிருத்தியின் சகாப்தத்தை உருவாக்கும்.' என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment