(எம்.எப்.எம்.பஸீர்)
பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் மூவர் புதிதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் 60 வயதை பூர்த்தி செய்த பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாக பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜகத் அபேசிறிகுணவர்தனவும் ஓய்வு பெரும் நிலையில், 5 சிரேஷ்ட் பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையிலேயே அதில் மூன்று பதவிகளுக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர்களாக இருந்த மூவர் தரமுயர்த்தப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
பிரதிப் பொலிஸ்மா அதிபர்களாக இருந்த ரன்மல் கொடித்துவக்கு, கித்சிறி ஜயலத் மற்றும் ராஜித்த ஸ்ரீ தம்மிந்த ஆகியோரே இவ்வாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் 1999 ஆம் ஆண்டு உதவி பொலிஸ் அத்தியட்சர்களாக சேவையில் இணைந்தவர்களாவர்.
குறித்த ஆண்டில் உதவி பொலிஸ் அத்தியட்சர்களாக இணைந்துகொண்ட சஞ்ஜீவ மெதவத்த, சஞ்ஜீவ தர்மரத்ன ஆகியோர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு தர முயர்த்தப்படுவதற்கான காத்திருப்பில் உள்ளனர்.
அத்துடன் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவும் இதே பொலிஸ் அதிகாரிகளுடன் சேவையில் இணைந்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment