விவசாயிகளின் நிவாரண உரத்தினை அதிக விலைக்கு விற்ற அதிகாரி கைது! - News View

About Us

About Us

Breaking

Monday, June 14, 2021

விவசாயிகளின் நிவாரண உரத்தினை அதிக விலைக்கு விற்ற அதிகாரி கைது!

(எம்.மனோசித்ரா)

வாரியப்பொல பிரதேசத்தில் விவசாயிகளுக்கு நிவாரண விலைக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட உரத்தினை தனது பிரத்தியேக விற்பனை நிலையத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்த வாரியப்பொல விவசாய சேவைகள் அபிவிருத்தி அலுவலக அபிவிருத்தி அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 1500 ரூபா என்ற நிவாரண விலையில் குறித்த உரத்தினை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றில் 50 உர மூட்டைகளை எடுத்துச் சென்று தனது பிரத்தியேக விற்பனை நிலையத்தில் குறித்த அபிவிருத்தி அதிகாரி விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

விவசாயிகளுக்கு நிவாரண விலைக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட உரத்தினை அதிக விலைக்கு விற்பனை செய்தமை மற்றும் ஊழல் செய்தமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் குறித்த அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வாரியபொல பொலிஸார் மேலதி விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment