மண்முனைப்பற்று முஸ்லிம் சமூகத்திற்கு திட்டமிட்டு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 1, 2021

மண்முனைப்பற்று முஸ்லிம் சமூகத்திற்கு திட்டமிட்டு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி

எம் எஸ் எம் நூர்தீன்

மட்டக்களப்பு - மண்முனைப்பற்று முஸ்லிம் சமூகத்திற்கு திட்டமிட்டு அநீதி இழைக்கப்படுவதாக மண்முனைப்பற்று பிரதேச சபை முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 31/05/2021 ஆம் திகதி மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எல்லை நிர்ணயம் தொடர்பான விசேட கூட்டத்தில் மண்முனைப்பற்றில் இருபத்து ஆறு வீதம் வாழும் முஸ்லிம் சமூகம் சார்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கோ அல்லது முஸ்லிம் சமூகம் சார்ந்த அமைப்புகளுக்கோ அழைப்பு விடுக்கப்படாமல் எல்லை நிர்ணயம் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு செயற்பாடாகும். வேண்டுமென்றே திட்டமிட்டு முஸ்லிம் சமூகத்தை ஓரம் தள்ளிவிட்டு இச்செயற்பாடு நடந்து இருக்கின்றதா ? என்ற சந்தேகமே எமக்கு எழுகின்றது.

.இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதும் இதற்கு கண்டனம் தெரிவிப்பதும் அப்பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் சமூக மக்கள் சார்பிலும் முஸ்லிம் சமூக மக்கள் பிரதிநிதிகள் சார்பிலும் வழக்கமாகிப் போன ஒன்றாகிவிட்டது.

எனினும் எமது உரிமைகள் நசுக்கப்படுகின்றன போது அதற்கு எதிராக குரல் கொடுக்கும் சக்தியாக நாங்கள் இருப்போம். எம் சமூகத்திற்கு இழைக்கப்பட்டிருக்கும் இவ் அநீதி தொடர்பில் உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment