வியட்நாமில் ஒட்டு மொத்த நகர மக்களிடமும் வைரஸ் சோதனை - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 1, 2021

வியட்நாமில் ஒட்டு மொத்த நகர மக்களிடமும் வைரஸ் சோதனை

வியட்நாமில் ஏற்பட்டிருக்கும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஒட்டு மொத்த ஹோ சி மின் நகர மக்களிடமும் சோதனை நடத்தப்படுவதோடு புதிய கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டுள்ளன.

மதத்தளம் ஒன்றில் புதிய கொத்தணி ஒன்று உருவான நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் வியட்நாம் வெற்றி கண்டபோதும் அந்நாட்டில் அண்மைய வாரங்களில் நோய்த் தொற்று அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மிக ஆபத்தான வைரஸ் திரிபு ஒன்று பற்றி கண்டுபிடித்திருப்பதாக வியட்நாம் கடந்த சனிக்கிழமை அறிவித்திருந்தது.

இந்தியா மற்றும் பிரிட்டனில் அடையாளம் காணப்பட்ட நோய்த் தொற்றின் கலவையாகவும் காற்றில் வேகமாகப் பரவக்கூடியதுமாக புதிய வைரஸ் திரிபு இருப்பதாக வியட்நாம் அரசு அறிவித்துள்ளது.

ஹோ சி மின் நகரில் உள்ள கிறிஸ்தவ மதத்தளம் ஒன்றை மையமாகக் கொண்டு குறைந்தது 125 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் அந்த நகரின் 13 மில்லியன் மக்களிடம் சோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment