கொவிட் செயலணி நிதியத்திற்காக குளோபல் விங்ஸ் தொண்டு நிதியம் ரூபா ஒரு கோடி அன்பளிப்பு - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 1, 2021

கொவிட் செயலணி நிதியத்திற்காக குளோபல் விங்ஸ் தொண்டு நிதியம் ரூபா ஒரு கோடி அன்பளிப்பு

எம் எஸ் எம் நூர்தீன்

குளோபல் விங்ஸ் தொண்டு நிதியம் (Global Wings Charity) ஒரு கோடி ரூபாவை கொவிட் செயலணி நிதியத்திற்காக வழங்கி உள்ளது.

கொழும்பு அலரி மாளிகையில் நேற்று (31) நடந்த நிகழ்வொன்றில் அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷவிடம் இந்த நிதி வழங்கப்பட்டதுடன் அவரது நேரடி மேற்பார்வையில் கொவிட் தொடர்பான செலவீனங்களுக்காக அதனைப் பயன்படுத்துமாறு தொண்டு நிதியத்தின் பணிப்பாளர்களும் சபை அங்கத்தவர்களும் வேண்டுகோள் விடுத்தனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்று நோயின் பரவலை அடுத்து அதனை விரைவில் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நிதி உதவி வழங்கப்பட்டதாக தொண்டு நிதியத்தின் பணிப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

தீவிரமாக பரவி வரும் கொவிட் தொற்று நோயை ஒழிப்பதில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ உட்பட அரச தரப்பினர் மற்றும் சுகாதார துறை மற்றும் பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்டு வரும் பகீரத நடவடிக்கைகளுக்காக நிதியத்தின் சார்பில் அமைச்சர் நாமலிடம் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

குளோபல் விங்ஸ் தொண்டு நிதியத்தின் (Global Wings Charity) சார்பாக செயலாற்றுகை உறுப்பினர்களான பின்வருவோர் பங்கேற்றனர்.

இந்த நிறுவனத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த Mohamed Nifras Ramees LL.B (Hons) நிறைவேற்று பணிப்பாளராக (Executive Board of Director) கடமை புரிகின்றமை குறிப்பிடத்தக்கது.

Mr.F S Lopez (Executive Board of Director)
Mr.M R M Nifras (Executive Board of Director)
Mr.B J Vasanthabalan (Auditor)
Mr.Nimal Jayasinghe (Board of Member)
Mr.Malwala A Dananja (Board of Member)
Mr.N Kamalraj (Board of Member)
Mr.T Jeyakumar (Board of Member)

No comments:

Post a Comment

Post Bottom Ad