உங்கள் இலக்குகளை அடைய உங்களுக்கு நீங்களே சவால் விடுங்கள், கடினமாக உழையுங்கள என எவரெஸ்ட் சிகரத்தை வேகமாக ஏறி உலக சாதனை படைத்த ஹொங்கொங் பெண் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
ஹொங்கொங்கைச் சேர்ந்த முன்னாள் ஆசிரியரான சாங் இன்-ஹங் (Tsang Yin-Hung) 26 மணித்தியாலத்தில் எவரெஸ்ட் சிகரத்தை வேகமாக ஏறி சாதனை படைத்த பெண்மணியாவார்.
நேபாள நாட்டைச் சேர்ந்த 44 வயதான முன்னாள் ஆசிரியரானா புன்ஜோ ஜாங்மு லாமா 2017 ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தை 39 மணித்தியாலமும் 6 நிமிடங்களில் வேகமாக ஏறி படைத்த சாதனையை முறியடித்துள்ளார்.
சாங் 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் எவரெஸ்ட் சிகரத்தை வேகமாக ஏறி சாதனை படைத்த முதல் ஹொங்கொங் பெண்மணி ஆவார். இது இமயமலை உச்சத்தை அளவிடுவதற்கான அவரது மூன்றாவது முயற்சியாகும்.
எவரெஸ்ட் சிகரத்திலிருந்து பாதுகாப்பாக திரும்பி வந்து சாதனை படைத்த பின்னர் அடா என்றும் அழைக்கப்படும் சாங் “அனி” செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய செவ்வியில்,
தன்னைதானே சவால் விடுத்து, அதில் கடுமையாக உழைத்ததன் மூலம் தனது பணியில் வெற்றி பெற்றதாகக் தெரிவித்துள்ளார்.
"எனது முதல் பயணம், இது நிச்சயமாக எனது மாணவர்களுக்கானது. நீங்கள் உண்மையிலேயே உயர்ந்த மற்றும் கடினமான இலக்கைப் பெற்றால், நீங்கள் படிப்படியாக பயிற்சி செய்ய முயற்சித்தால், ஆம், நிச்சயமாக நிறைய உள்ளன என்பதை எனது மாணவர்களுக்குக் காட்ட விரும்புகிறேன்.
நீங்கள் எதையாவது செய்ய விரும்பும் போதெல்லாம் சவால்கள் மற்றும் சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டும், ஒருபோதும் கைவிடக்கூடாது. இறுதியாக, நீங்கள் அதை அடைய முடியும்.
முன்னாள் ஆசிரியரான இன்-ஹங் கடந்த மாத ஆரம்பத்தில் 25 மணி 50 நிமிடங்களுக்குள் மலையை அடைந்ததன் பின் ஒரு பெண் உலகின் மிக வேகமாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறியதாக பதிவு செய்தார்.
வழக்கமாக, ஏறுபவர்கள் உச்சத்தை அடைவதற்கு முன்பு பல நாட்கள் வெவ்வேறு முகாம்களில் செலவிடுவார்கள்.
No comments:
Post a Comment