பாகிஸ்தானின் அவாமி தேசியக் கட்சி (ஏ.என்.பி) ஆனது வளர்ந்து வரும் சட்டத்திற்கு விரோதமான இலக்கு வைத்து கொல்லப்படுதல் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படுதல் ஆகிய செயற்பாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியது.
பக்துன் தேசியவாத கட்சியின் பெஷாவர் மற்றும் நகர மாவட்ட உறுப்பினர்கள் பெஷாவர் ஊடகவியலாளர் சங்கத்தில் கூடி மேற்குறிப்பிட்ட இலக்கு வைக்கப்பட்ட கொலைகள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படுதல் பிரச்சினைகள் தொடர்பில் தமது ஆதங்கத்தினை வெளியிட்டனர்.
கட்சியின் மாகாண மூத்த துணைத் தலைவர் குஷ்தில் கான், வழக்கறிஞரும் கலாசார செயலாளருமான காதிம் ஹூசியன், சட்டமன்ற உறுப்பினர்கள் நிசார் மொமண்ட் மற்றும் சலாவுதீன் கான் மொமண்ட் ஆகியோர் போராட்டத்திற்கு தலைமை தாங்கினர். கட்சியின் ஏனைய பிரிவுகளின் அலுவலக பொறுப்பாளர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
மொஹமட் மற்றும் கேபி உட்பட பிற மாவட்டங்களில் இருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும் போராட்டக்காரர்களில் உள்ளடங்கி இருந்தனர்.
இந்நிலையில் போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் உருவப்படங்களை எடுத்துச் சென்றனர். அவர்கள் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் இலக்கு வைக்கப்பட்ட கொலைகளுக்கு எதிராக கோசங்களை எழுப்பினார்கள். வலிந்து காணாமல் போனவர்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் மீட்குமாறு கோரிக்கையையும் முன்வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் அவாமி தேசியக் கட்சியின் தலைவர்கள் உரையாற்றுகையில், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள், மீட்கப்படாமையானது அரசாங்கத்தின் தோல்வியை சுட்டிக்காட்டியுள்ளது என்று விமர்சனம் செய்தனர்.
அத்துடன், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் மீது ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருந்தால், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சட்டத்தின்படி வழக்குத் தொடரப்பட வேண்டும். அல்லது அவர்கள் நிரபராதிகள் என்றால் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். வலிந்து காணாமலாக்கப்படுவது எந்த வகையிலும் பொறுத்துக் கொள்ள முடியாதவொன்றாகும் என்றும் குறிப்பிட்டனர்.
இதற்கிடையில், அவாமி தேசியக் கட்சியின் நூற்றுக்கணக்கான ஆர்வலர்கள் இலக்கு வைக்கப்பட்ட கொலை சம்பவங்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை மீட்காமை மற்றும் ஜொனிகேல் சம்பவம் ஆகியவற்றிற்கு எதிராகவும் பெரும் போராட்டத்தை நடத்தினர்.
அவாமி தேசியக் கட்சியின் மாவட்டத் தலைவர் சையத் ஜமால் பச்சா, மாவட்ட பொதுச் செயலாளர் ஹாரூன் கான், மகளிர் பிரிவுத் தலைவர் ஷாஜியா அவுரங்கசீப், தெஹ்ஸில் மார்டன் தலைவர் அபாஸ் சானி மற்றும் பிற அலுவலர்கள் தலைமையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் மொர்டன் ஊடக அடையத்திற்கு வெளியே ஒன்று கூடினார்கள். அவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியில் பல்வேறு தொழிற்சங்க சபைகளைச் சேர்ந்த ஏராளமான அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர்.
எதிர்ப்பாளர்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு ஆதரவாக கோசங்கள்; பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர். எதிர்ப்பு பேரணியில் உரையாற்றிய பேச்சாளர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை மீட்குமாறு அரசாங்கத்தை கோரினர். கைபர் பக்துன்க்வாவில் மட்டுமே இலக்கு கொலை சம்பவங்கள் நடப்பதாகவும் தெரிவித்தனர்.
“பக்துன்களின் முன்னெடுக்கப்படும் இனப்படுகொலை திட்டம் வெற்றி பெற நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். பக்துன்கள் தங்கள் சொந்த நிலத்தில் கொல்லப்படுகிறார்கள் இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது”என்று வலியுறுத்தினார்கள்.
அண்மையில் ருஸ்தாமில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியதில் இரண்டு கான்ஸ்டபிள்கள் உயிரிழந்தார்கள். அவர்கள் ‘தியாகிகளா’ என்று கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தனர். அதன் பின்னர் போராட்டக்காரர்கள் அமைதியாக கலைந்து சென்றனர். ஆனால் அவர்கள் நீதிக்காக காத்திருக்கின்றார்கள்.
No comments:
Post a Comment