மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கைக்கு பயணிப்பதற்கான பயணக் கட்டுப்பாடுகள் ஜூலை 01 முதல் அமுலாகவுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
மத்திய கிழக்கில் இருந்து வரும் பயணிகளிடையே கொவிட்-19 தொற்று அதிகரித்த போக்கு காணப்படுகின்றமையால் இலங்கையின் சுகாதார அதிகாரிகள் நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் மருத்துவ சிகிச்சைகள் வழங்குவதில் சிரமப்படுகிறார்கள் என்பதை கவனித்தில் கொண்டு மத்திய கிழக்கு நாடுகளான, ஐக்கிய அரபு அமீரகம் உட்பட ஏனைய மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கை திரும்புவதற்ற்கான பயணக்கட்டுப்பாடுகள் 2021 ஜூலை 01 முதல் 2021 ஜூலை 13 வரை அமுலில் இருக்கும்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இலங்கையர்களின் கவலைகள் மற்றும் இடர்பாடுகள் குறித்து தூதரகமனது இலங்கையின் உயர்மடட அரச ஆணயத்திற்கு தெரிவிக்கும்.
இலங்கை அரசாங்கத்தின் சார்பாக, இலங்கை தூதரகமானது இந்த விடயத்தில் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதுடன், இந்த கடினமான நேரத்தில் உங்களின் நல்ல புரிதல் மற்றும் ஒத்துழைப்பிற்கு பாராட்டினை தெரிவிக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளது.
கட்டார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமான், பஹரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கே இவ்வாறு பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment